திருவள்ளூர் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பலி


திருவள்ளூர் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பலி
x
தினத்தந்தி 4 Jun 2017 3:20 AM IST (Updated: 4 Jun 2017 3:20 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பலியானார்.

திருவள்ளூர்,

சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்தவர் சிராஜுதீன் பாஷா. இவரது மனைவி பதுனிஷா பேகம் (வயது 57). இவரது மகள் சுபேதாபேகம். இவருக்கு திருமணமாகி திருவள்ளூரை அடுத்த ஈக்காட்டில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் சுபேதாபேகத்தை பார்ப்பதற்காக பதுனிஷாபேகம் தனது இளைய மகள் அஜிராபேகம் (30) என்பவருடன் ஈக்காட்டுக்கு சென்றார். இரவு பதுனிஷாபேகம், அஜிராபேகம் இருவரும் வேலையின் காரணமாக மொபட்டில் திருவள்ளூருக்கு வந்து விட்டு மீண்டும் ஈக்காட்டுக்கு சென்று கொண்டிருந்தனர்.

அவர்கள் புன்னப்பாக்கம் சாலை வளைவில் திரும்பும்போது பின்னால் திருவள்ளூரில் இருந்து செங்குன்றம் நோக்கி வேகமாக வந்த கன்டெய்னர் லாரி எதிர்பாரதவிதமாக மொபட் மீது மோதியது.

சாவு

இதில் பதுனிஷாபேகம், அஜிராபேகம் இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். அப்போது கன்டெய்னர் லாரி சக்கரத்தில் சிக்கிய அஜிராபேகம், தாய் கண் எதிரிலேயே பரிதாபமாக இறந்து போனார். இதை பார்த்த டிரைவர் லாரியை அங்கேயே விட்டு விட்டு தப்பிச்சென்று விட்டார். காயம் அடைந்த பதுனிஷாபேகம் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இது குறித்து பதுனிஷாபேகம் புல்லரம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Related Tags :
Next Story