மதுரை ஐகோர்ட்டு உத்தரவுப்படி புகளூர் காகித ஆலையில் வக்கீல்கள் குழுவினர் ஆய்வு
ஆழ்குழாய் அமைத்து தண்ணீர் எடுப்பதாக தொடரப்பட்ட வழக்கில் மதுரை ஐகோர்ட்டு உத்தரவுப்படி புகளூர் காகித ஆலையில் வக்கீல்கள் குழுவினர் ஆய்வு செய்தனர். விவசாயிகள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர்,
கரூர் அருகே புகளூரில் தமிழக அரசின் செய்தித்தாள் நிறுவனத்தின் காகித ஆலை (டி.என்.பி.எல்.) உள்ளது. இதில் 3 யூனிட்டில் காகிதம் தயாரிக்கப்பட்டு வந்தன. காவிரி ஆற்றில் தண்ணீர் பற்றாக்குறையின் காரணமாக கடந்த 1 மாதத்திற்கு முன்பு ஒரு யூனிட்டில் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டன.
இந்த நிலையில் காகித ஆலையின் உள்ளே ஆழ்குழாய் அமைத்து தண்ணீர் எடுத்து உற்பத்திக்கு பயன்படுத்தி வருவதாகவும், அதனால் அந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பதாகவும், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதாக அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும் இது தொடர்பாக கடந்த மே மாதம் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் (பொறுப்பு) சூர்யபிரகாஷிடம் விவசாயிகள் எடுத்துரைத்து தண்ணீர் எடுப்பதை தடுத்து நிறுத்த கோரிக்கை வைத்தனர்.
ஐகோர்ட்டில் வழக்கு
இந்த நிலையில் வேலாயுதம்பாளையம் பகுதியை சேர்ந்த விவசாயி மதியழகன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் கடந்த மாதம் (மே) 16-ந் தேதி வழக்கு தொடுத்தார். அதில், புகளூர் காகித ஆலையில் ராட்சத எந்திரம் மூலம் ஆழ் குழாய் அமைத்து தண்ணீர் எடுத்து வருவதாகவும், அதனால் அந்த பகுதியில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதாகவும், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படியும் கூறியிருந்தார். இதையடுத்து வக்கீல்கள் சுடலையாண்டி, நிரஞ்சன்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் காகித ஆலையில் ஆய்வு நடத்தி அறிக்கை அளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி வக்கீல்கள் சுடலையாண்டி, நிரஞ்சன்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று காலை புகளூர் காகித ஆலையில் ஆய்வு நடத்தினர். அவர்களுடன் மனுதாரர் மதியழகன், விவசாயிகள் சுப்பிரமணியம், மற்றொரு மதியழகன் ஆகியோர் உடன் சென்றனர்.
பரபரப்பு
ஆலையின் உள்ளே குடியிருப்பு வளாகம், வளாகப்பகுதி, விருந்தினர் மாளிகை அருகே மற்றும் ஆலையின் உள்புறம் அனைத்து பகுதிகளிலும் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். ஆய்வின் அறிக்கையை நாளை (திங்கட்கிழமை) ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய உள்ளனர். இதற்கிடையில் வக்கீல்கள் ஆய்வு செய்ய வந்திருப்பது குறித்து தகவல் அறிந்ததும் அப்பகுதி விவசாயிகள் ஆலையின் முன்பு திரண்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story