மாணவர்களை ஏற்றி செல்லும் ஆட்டோ டிரைவர்கள் விதிமுறைகளை கடைபிடிக்காவிட்டால் கடும் நடவடிக்கை


மாணவர்களை ஏற்றி செல்லும் ஆட்டோ டிரைவர்கள் விதிமுறைகளை கடைபிடிக்காவிட்டால் கடும் நடவடிக்கை
x
தினத்தந்தி 4 Jun 2017 4:34 AM IST (Updated: 4 Jun 2017 4:34 AM IST)
t-max-icont-min-icon

மாணவர்களை ஏற்றி செல்லும் ஆட்டோ டிரைவர்கள் விதிமுறைகளை கடைபிடிக்காவிட்டால் கடும் நடவடிக்கை போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை

புதுச்சேரி,

பள்ளி மாணவர்களை ஏற்றிச்செல்லும் ஆட்டோ டிரைவர்கள் விதிமுறைகளை கடைப்பிடிக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

விதிமுறைகள்

புதுவையில் பள்ளி கல்லூரி மாணவர்களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் ஆய்வு சிறப்பு முகாம் போக்குவரத்து நகரத்தில் நடந்து முடிந்துள்ளது. இவ்வாறு ஆய்வு செய்யப்பட்ட வாகனங்களுக்கு ஸ்டிக்கர்களும் ஒட்டப்பட்டுள்ளன.

அடுத்தகட்டமாக மாணவர்களை ஏற்றிச்செல்லும் ஆட்டோக்களை ஆய்வு செய்ய அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனர். ஆனால் பல்வேறு காரணங்களால் அது முடியவில்லை. இந்த நிலையில் ஆட்டோக்களில் செல்லும் மாணவர்கள், ஆட்டோ டிரைவர்கள், பெற்றோர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ளனர்.

அந்த விதிமுறைகள் வருமாறு

6 பேருக்கு மேல்...

*பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஆட்டோக்கள் மூலம் பள்ளிக்கு அனுப்பும்போது அதிகப்படியான குழந்தைகளை (6 பேருக்கு மேல்) ஏற்றிச்செல்லும் ஆட்டோக்களில் அனுப்புவதை கண்டிப்பாக தவிர்க்கவேண்டும்.

*ஆட்டோக்களின் ஆவணங்கள் மற்றும் மீட்டர் சரியான முறையில் உள்ளதா? என்பதை விசாரித்து அதை உறுதி செய்த பிறகே குழந்தைகளை அதில் அனுப்பவேண்டும்.

கடும் நடவடிக்கை

*ஆட்டோ டிரைவர் மது அருந்திவிட்டோ, அதிக வேகமாகவோ ஆட்டோ ஓட்டினாலும் மற்றும் அதிக நபர்களை ஏற்றி சென்றாலும் புகார் அட்டையின் மூலம் புகார்களை தெரிவிக்கலாம். மாணவர்கள் தங்களது புத்தகப்பை மற்றும் மதிய உணவு பைகளை ஆட்டோவுக்கு வெளியே தொங்கும்படி மாட்டி செல்வதை தவிர்க்கவேண்டும். முக்கியமாக மாணவர்கள் ஆட்டோவில் பயணிக்கும்போது கை, கால் மற்றும் தலையை வெளியே நீட்டிச்செல்வதை தவிர்க்கவேண்டும்.

*இவற்றை ஆட்டோ டிரைவர்கள் கடைப்பிடிக்க தவறும்பட்சத்தில் அவர்கள் மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அந்த விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.


Next Story