பயிர்க்கடன் விவகாரம்: நில அளவு வரையறையை வாபஸ் பெற வேண்டும்
விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து, அதனை தீர்ப்பதற்கான வழிமுறைகளை பரிந்துரை செய்யுமாறு சிறப்பு குழு ஒன்றை முதல்–மந்திரி நியமித்தார்.
மும்பை,
விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து, அதனை தீர்ப்பதற்கான வழிமுறைகளை பரிந்துரை செய்யுமாறு சிறப்பு குழு ஒன்றை முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நியமித்தார். இக்குழு ஆய்வுசெய்து அதன் அறிக்கையை மாநில அரசுக்கு அனுப்பி இருக்கிறது.
அதில், கூறி இருப்பதாவது:–
விவசாய நிலங்களுக்கு விதிக்கப்பட்ட நில அளவு வரையறையை வாபஸ் பெற்று, மரத்வாடா மற்றும் விதர்பா மண்டலங்களில் உள்ள அனைத்து விவசாயிகளையும் பயிர்க்கடன் வரையறைக்குள் கொண்டு வர வேண்டும். இது சாத்தியம் இல்லை என்றால், வறட்சி நில வரையறையை 5 ஹெக்டேராகவும், நீர்ப்பாசன நில வரையறையை 2 ஹெக்டேராகவும் நீட்டிக்க வேண்டும். விதர்பா மற்றும் மரத்வாடாவில் இடர்பாடுகளில் சிக்கித்தவிக்கும் பெரும்பாலான விவசாயிகளுக்கு இது உதவிகரமாக இருக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story