இத்தாலிய பேஷன் ... இந்தியப் பெண்...
“நான் இந்த துறைக்கு வர எனது தந்தை சந்திரசேகரனும், தாயார் ரமணியும் காரணம். அம்மா ஜவுளித்துறை பின்னணி கொண்டவர்.
“நான் இந்த துறைக்கு வர எனது தந்தை சந்திரசேகரனும், தாயார் ரமணியும் காரணம். அம்மா ஜவுளித்துறை பின்னணி கொண்டவர். அம்மாவை பார்த்தே நான் வளர்ந்தேன். நான் பேஷன் துறையில் படிக்க விரும்பியதையும் ஏற்றுக்கொண்டார்கள். திருமணத்திற்கு பிறகு என் கணவர் கிரிஷ்குமார் ஒத்துழைப்புகொடுத்தார். இப்போது என்னை மகள் ஊக்கப்படுத்துகிறாள். எல்லா விஷயங்களிலும் அவள் தெளிவாக கருத்துக்களை எடுத்து வைப்பாள். ஐரோப்பிய தொழில் திட்டம் ஒன்றுக்காக நாங்கள் இத்தாலி வந்தோம்” என்கிறார், ரேணுகா.
இத்தாலிக்கும், இந்தியாவுக்கும் இடையேயான பேஷன் வித்தியாசங்கள் பற்றி அவர் கூறுகையில், “இத்தாலி பேஷன் நிறைந்த பூமி. ஒரு பேஷன் டிரெண்ட் இங்கே அறிமுகமானால் எல்லோரும் அதை பின்பற்றுவார்கள். ஆனால் ஒவ்வொருவரும் தங்களுக்கு தக்கபடி அதில் புதுமைகளையும், தனித்துவத்தையும் எதிர்பார்ப்பார்கள். அதனால் ஒரே நேரத்தில் எங்கு பார்த்தாலும் ஒரே மாதிரியான பேஷனை பின்பற்றியதுபோல் இருக்கும். இந்தியாவில் இத்தகைய நடைமுறை பிரபலமாகவில்லை. ஒரு சினிமாவை பார்த்துவிட்டு அதில் நடிகை பயன்படுத்தியிருக்கும் பேஷனை தன்னாலும் கடைப் பிடிக்க முடியுமா என்ற கோணத்தில் இங்குள்ள பெண்கள் சிந்திப்பார்கள்.
எங்களைப் போன்றவர்கள் புதிய பேஷன் டிரெண்ட்டை உருவாக்குகிறோம். உலகில் எல்லா நாடுகளிலும் இதன் அறிமுக நடைமுறை ஒரே மாதிரிதான் இருக்கிறது. புதிய டிரெண்டுகளை உருவாக்குவதற்கென்றே தனி ஏஜென்சிகள் உள்ளன. அவர்கள் ஐந்து வருடங்களுக்குரிய பேஷன்களை முதலிலே அறிமுகப்படுத்தி விடுவார்கள். அதில் கலர் பற்றிய குறிப்புகள், டிரெண்ட் பற்றிய குறிப்புகள் எல்லாம் இருக்கும். எந்த வகை துணிகள் பயன்படுத்தப்படுகிறது, என்ன மாதிரியான நூல்கள் அதில் உபயோகப் படுத்தப்பட்டிருக்கிறது என்பது போன்ற அனைத்து விவரங்களும் ஆய்வு குறிப்புகள் போன்று அதில் காணப்படும். பெரும்பாலான டிசைனர்கள் அதனை நடைமுறைப்படுத்துவார்கள். அவர்களது புதிய டிரெண்டுகளை நாம் ஏற்றுக்கொள்ளவும் செய்யலாம். நமக்கென்று தனித்துவமாகவும் உருவாக்கலாம்” என்று விளக்கம் தருகிறார்.
பெண்களின் அழகை மேம்படுத்துவதில் பேஷன் டிசைனர் களின் பங்கு என்ன? என்ற கேள்விக்கும் ரேணுகா பதில் தரு கிறார்.
“நீங்கள் ஒரு துணி கடைக்கு சென்று உங்களுக்கு பிடித்த உடையை வாங்கிக்கொள்ளும்போது உங்களுக்கு இயல்பான மகிழ்ச்சி மட்டுமே கிடைக்கும். அதுவே உங்களுக்காக தயாரிக்கப்பட்ட உடையாக இருந்தால், உங்கள் உடலுக்கு தக்கபடி அது பொருந்தி உங்களுக்கு அதிக மகிழ்ச்சியை தரும். குண்டானவர்கள் என்றால் அவருக்கு பெரிய பிரிண்டு டிசைன்கள் தேவையில்லை என்ற முடிவுக்கு வருவோம். ‘கட்ஸ் அன்ட் பேட்டர்ன்’னில் கவனம் செலுத்துவோம். இவைகளில் கவனம் செலுத்தினாலே குண்டான உடல் குறைந்ததுபோல் தோன்றும். குள்ளமான கழுத்தைக் கொண்டவருக்கு டைட் நெக் டிசைனை செய்யக் கூடாது. அவருக்கு ஓப்பன் நெக்தான் அழகுதரும். ஒவ்வொருவரின் உடலுக்கு தக்கபடியான டிசைனை தேர்ந்தெடுத்து, அன்றைய பேஷனுக்கு தக்கபடி அதை வடிவமைத்து, அதனை சிறப்பாக்கி கொடுப்பதுதான் பேஷன் டிசைனரின் வேலை. இந்த உலகத்தில் எல்லா பெண்களின் மனதும் ஒரே மாதிரிதான் இருக்கிறது. அனைவருமே காலத்துக்கு தக்க படி பேஷனில் சிறந்து விளங்க விரும்புகிறார்கள்.
சினிமா மிகப்பெரிய மக் கள் தொடர்பு சாதனமாக இருந்துகொண்டிருக்கிறது. அதில் இடம்பெறும் நடிகைகளின் உடைகள் உடனடியாக பெண்களால் கவனிக் கப்படுகிறது. ஆனால் சர்வதேச அளவில் நடக்கும் பேஷன் ஷோக்களில் இருந்துதான் அவை சினிமாவுக்கு இடம்பெயர்கின்றன. பிரபலங்களில் பலர் அவர்களது பேஷன் டிசைனர்கள் காப்பியடித்துக்கொடுக்கும் உடைகளைதான் அணிந்து செல்கிறார்கள்” என்றவரிடம், பெண்களின் உடை பற்றி அவ்வப்போது விவாதங்கள் உருவாகிறதே, என்று கேட்டோம்.
“தான் எந்த உடையை உடுத்தவேண்டும் என்று அவள்தான் தீர்மானிக்கிறாள். ஆணாக இருந்தாலும் அவர் தீர்மானிக்கும் உடையைதான் அவர் அணிந்துகொள்கிறார். நாம் அணிந்துகொள்ளும் உடை நமக்கான அடையாளம். நாம் உடுத்தும் உடை நமக்கு தன்னம்பிக்கை தரவேண்டும். நாம் அணியும் உடைக்குள் மற்றவர்கள் புகுந்து விவாதத்தை உருவாக்குவதில் எனக்கு விருப்பம் இல்லை” என்று கூறும் ரேணுகா, பெண்களுக்கு புடவைதான் அதிக அழகு என்று கூறுகிறார்.
“வெளிநாட்டில் வேலை செய்யும்போது வெளிநாட்டினர்களில் பலர் என்னிடம், ‘பெண்களுக்கு பொருத்தமாக அமைய வேண்டியது புடவையா? ஜாக்கெட்டா?’ என்று கேட்பார்கள். பெண்களுக்கு அதிக அழகு தருவது புடவைதான் என்பது என் கருத்து. பிரபலமான டிசைனர்கள் பலரும், புடவையில் பெண்கள் அதிக அழகுடன் மிளிர்வது பற்றியும், புடவையின் சிறப்புகள் பற்றியும் எப்போதும் பேசிக்கொள்வதுண்டு. இவ்வளவு நேர்த்தியான ஆடை உலகில் வேறு எதுவும் இல்லை.
குறிப்பிட்ட உறுப்புகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கும் விதத்தில் உடைகளை வடிவமைப்பது உலக அளவில் நடைமுறையில் இருக்கிறது. கொடுக்கப்படும் ‘தீம்’க்கு தக்கபடி அது அமையும். பெண்களின் உள்ளாடை சம்பந்தப்பட்ட பேஷன் ஷோ என்றால், தொழில்ரீதியாக அதற்கு முக்கியத்துவம் கொடுத்து வெளிப்படுத்தியாகத்தான் வேண்டும்.
அழகின் விழிப்புணர்வில்தான் கலையின் இதயம் இருக்கிறது. பெண்களின் உடல் மிகவும் அழகானது. பேஷன் டிசைனர்கள் தங்கள் கலை உணர்வின் மூலம் அந்த அழகை மேம்படுத்த முயற்சிக்கிறார்கள். அதனால் அதை பாலியல்ரீதியான கண்ணோட்டத்தில் ஒருபோதும் பார்க்கக்கூடாது. அழகு என்ற கட்டுக்குள் நின்றுகொண்டு அதை பார்க்கவேண்டும்.
பலரும் பேஷன் துறையை ஜிகினாக்கள் ஜொலிக்கும் கனவு உலகம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அவ்வப்போது வரும் டிரெண்ட்டை பின்பற்றுவதாகவும்- படம் வரைந்து, எளிதாக அதை வடிவமைத்துவிடுவதாகவும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அப்படி அல்ல. இந்த உலகத்தில் துணி உண்டு. விஞ்ஞானம் உண்டு. கலை, சிந்தனை, கற்பனை, ஜவுளி ரசாயனம் போன்ற பல விஷயங்களும் உண்டு. அந்த உடைக்கும்- அதை உடுத்தும் உடலுக்கும் உள்ள உறவுகளையும் கணிக்கவேண்டும். இது ஆழ்ந்து கவனித்து, கடுமையாக உழைக்கவேண்டிய துறை. ஏதோ ஒன்றை வடிவமைத்து விட்டு இது தான் பேஷன் என்று சொல்லிக்கொண்டிருப்பதுபோல் பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். பேஷன் ஒரு கலை. அது மாடலிங் பெண்களுக்கு மட்டுமே உருவாகுவது அல்ல..” என்று விளக்கிச் சொல்கிறார், ரேணுகா.

Related Tags :
Next Story