தேனீக்களை தேடி வரவைத்த பெண்
விவசாயத்தில் நஷ்டங்களை சந்தித்து வரும் விவசாயிகளுக்கு செலவில்லாமல் இயற்கை முறையில் சாகுபடி செய்வதற்கான யுக்திகளை கற்றுக்கொடுத்து வருகிறார், ஹர்ஷிதா பிரகாஷ்.
விவசாயத்தில் நஷ்டங்களை சந்தித்து வரும் விவசாயிகளுக்கு செலவில்லாமல் இயற்கை முறையில் சாகுபடி செய்வதற்கான யுக்திகளை கற்றுக்கொடுத்து வருகிறார், ஹர்ஷிதா பிரகாஷ். என்ஜினீயரான இவர் இயற்கை விவசாயத்தின் மீது காட்டிய ஆர்வத்திற்கு ஆரம்பத்தில் விவசாயிகள் மத்தியில் வரவேற்பு இல்லாமல் இருந்திருக்கிறது. விவசாய குடும்பத்தை சேர்ந்த பெண்களுடன் சேர்ந்து ரசாயன கலப்பில்லாத இயற்கை உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளை தயாரிக்க தொடங்கி இருக்கிறார். செயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு அதிக செலவுகளை செய்து வந்த விவசாயிகள் ஹர்ஷிதாவின் செலவில்லா இயற்கை உர சாகுபடி முறைகளை பார்த்து அவருடன் கைகோர்க்க தொடங்கியிருக்கிறார்கள்.
என்ஜினீயராக பணி புரிந்து வரும் ஹர்ஷிதா, பகுதி நேரமாக இளைஞர்களுக்கான கிராமப்புற மேம்பாட்டு திட்டத்தில் இணைந்து ‘ஜீரோ பட்ஜெட் இயற்கை வேளாண்மை’ என்ற சாகுபடி முறைக்கு விவசாயிகளை ஈடுபடுத்த முனைப்பு காட்டி வருகிறார்.
“எனக்கு தொழில் துறை மீது ஆர்வம் அதிகம். கிராமப்புற மேம்பாட்டுக்கு இளைஞர்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் திட்டத்தில் இணைந்து செயல்பட்டு வருகிறேன். கணினி முன்பு அமர்ந்து வேலை பார்க்காமல் தரையில் அமர்ந்து பணிபுரிவது வித்தியாசமான அனுபவத்தையும், உற்சாகத்தையும் தருகிறது” என்கிறார்.
ஹர்ஷிதா மகாராஷ்டிரா மாநிலம் துனக்வாத் கிராமத்தில் விவசாயிகளுடன் இணைந்து களப்பணியாற்றி வருகிறார். அங்குள்ள விவசாயிகள் செலவில்லாமல் ‘ஜீரோ பட்ஜெட்டில்’ இயற்கை வேளாண்மையை நடைமுறைப்படுத்துவதற்கு ஊக்கப்படுத்து கிறார்.
“நான் இங்குள்ள விவசாயிகளை சந்தித்து பேசியபோது அவர்கள் கடந்த சில வருடங்களாக வறட்சி பாதிப்புக்கு ஆளாகி இருப்பது தெரியவந்தது. ஒரே வருடத்தில் 450 விவசாயிகள் தற்கொலை செய்திருக்கிறார்கள். நிறைய பேர் பிழைப்பு தேடி நகர்புறங்களுக்கு இடம்பெயர்ந் திருக்கிறார்கள் என்பதை அறிந்தேன். விவசாயி கள் நஷ்டம் அடைவதற்கு வறட்சி மட்டுமின்றி ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்துவதும் காரணம் என்பது புரிந்தது. ஆனால் அவர்களோ ரசாயனம் இல்லாமல் எந்த விளைபொருட்களையும் சாகுபடி செய்ய முடியாது என்ற எண்ணத்திலேயே இருந்தார்கள். அவர்களுடைய மனநிலையை மாற்றுவது மிக கடினமான விஷயமாக இருந்தது” என்கிறார்.
இவர் வேளாண்மை அதிகாரிகளை கிராமத்திற்கு அழைத்து வந்து விவசாயிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் நடத்தி இருக்கிறார். அதன் பிறகே விவசாயிகளுக்கு இயற்கை வேளாண் சாகுபடி மீது ஓரளவு நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. ஆனாலும் அதனை நடைமுறைப்படுத்த தயங்கி இருக் கிறார்கள். என்ஜினீயருக்கு படித்த பெண் விவசாயத்தின் மீது கொண்டிருந்த ஈடுபாட்டை பார்த்து ஒருசில விவசாயிகள் மட்டுமே ஹர்ஷிதாவுக்கு முதலில் ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறார்கள். அவர்களுக்கு எளிமையாக விவசாய யுக்திகளை புரிய வைக்கும் நோக்கில் இயற்கை வேளாண் சாகுபடி குறித்து புத்தகங்கள் எழுதியிருக்கும் கர்நாடகத்தை சேர்ந்த பத்மஸ்ரீ விருது பெற்ற சுபாஷ் பலேகரை சந்தித்து பயிற்சி பெற்றிருக்கிறார். விவசாயிகள் இயற்கை பூச்சிக்கொல்லிகள் மற்றும் உரங்கள் போன்ற உள்நாட்டில் கிடைக்கக்கூடிய, மக்கும் பொருட்களையே பயன்படுத்துகின்றனர். மண், மாட்டு சாணம், கம்போஸ்ட் கழிவுகளை உரமாக பயன்படுத்தும் முறை, பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறை, பசுவின் சிறுநீர், வேப்ப இலைகளை பயன்படுத்தி பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கும் முறைகளை கற்றறிந்து, விவசாயிகளுக்கு சொல்லிக்கொடுத்திருக்கிறார். விவசாய குடும்பத்தை சேர்ந்த பெண்களுடன் சேர்ந்து இவர் இயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் தயாரிப்பில் ஈடுபட தொடங்கியது விவசாயிகள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இயற்கை விவசாயத்தின் மீது ஆர்வம் இல்லாமல் இருந்த விவசாயிகளும் அதனை பின்பற்ற தொடங்கி இருக்கிறார்கள்.
“மூதாதையர்கள் போலவே இயற்கை விவசாயத்தை கடைப்பிடிக்க தொடங்கினால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். இயற்கை விவசாயம் மண்ணை வளப்படுத்துகிறது. முதலீட்டின் செலவும் குறைகிறது. பயிர்கள் வளர்வதற்காக வெளியில் இருந்து எதுவும் வாங்க வேண்டியதில்லை” என்கிறார்.
ஹர்ஷிதாவின் வழிகாட்டுதலின்படி இயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளை விவசாய குடும்பத்தினரே தயாரிக்க தொடங்கி இருக்கிறார்கள். ஒவ்வொரு வாரமும் மூன்று கிராமங்களுக்கு சென்று இயற்கை விவசாயம் பற்றிய பயிற்சியையும், விழிப்புணர்வையும் விதைத்து வருகிறார்.
தற்போது அந்த பகுதியில் காய்கறிகள், கரும்பு சாகுபடி அதிகரிக்க தொடங்கியிருக்கிறது. அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த விவசாயிகளும் தங்கள் விளைநிலங்களை இயற்கை சாகுபடிக்கு மாற்றுவதற்கு ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
“ஒருநாள் கிராம மக்களை சந்திக்க சென்றபோது தேனீக்கள் அங்கும், இங்கும் உலாவிக்கொண்டிருந்தன. சில வருடங்களாக தேனீக் களையே பார்க்க முடியாத நிலை இருந்து வந்தது. ஆனால் இப்போது சில மாதங்களாக தேனீக்கள் வரத்தொடங்கி இருக்கின்றன என்று விவசாயிகள் கூறினார்கள். அதை கேட்பதற்கு பெருமையாக இருந்தது” என்கிறார், ஹர்ஷிதா.
விவசாயிகள் விளைவிக்கும் காய்கறிகளை விற்பனை செய்வதற்கு சந்தை ஒன்றையும் ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார். அங்கு இயற்கை விவசாயத்தில் விளைவித்த காய்கறிகளை பொதுமக்கள் விரும்பி வாங்குகிறார்கள். நாளுக்கு நாள் காய்கறிவாங்குபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

Related Tags :
Next Story