உயிரை பணயம் வைத்து உயிர்காத்த பெண்கள் ‘கல்பனா சாவ்லா’ விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
உயிரை பணயம் வைத்து உயிர்காத்த பெண்கள் ‘கல்பனா சாவ்லா’ விருதுக்கு விண்ணப்பிக்கலாம் கலெக்டர் அறிக்கை
கடலூர்,
உயிரை பணயம் வைத்து, உயிர்காத்த பெண்கள் கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ராஜேஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கடலூர் மாவட்ட கலெக்டர் ராஜேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
கல்பனா சாவ்லா விருதுதனித்தன்மையுடன், ஆபத்தான சமயங்களில் சாதுரியமாக செயல்பட்டு உயிர்காத்த, ஆற்றல் மிக்க வீரமான, தைரியத்துடன் எதையும் எதிர்கொள்ளக்கூடிய ஒரு பெண்மணிக்கு ‘கல்பனா சாவ்லா’ விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.
2017–ம் ஆண்டுக்கான ‘கல்பனா சாவ்லா’ விருது வழங்கப்பட உள்ளது. எனவே கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான பெண்கள், இவ்விருதுக்கு விண்ணப்பிக்கலாம். அவ்வாறு விண்ணப்பிப்பவர்கள், உயிரை பணயம் வைத்து மனித உயிர்களை காத்தவர்களாக இருக்க வேண்டும். இதற்கு எவ்வித வயது வரம்போ, இன பாகுபாடோ கிடையாது. இதற்கான விண்ணப்பங்களை www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் உள்ள மாவட்ட விளையாட்டு அதிகாரி அலுவலகத்தில் வருகிற 7–ந்தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இது பற்றிய மேல் விவரங்களுக்கு 04142 220590 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.