கோத்தகிரியில் குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தைப்புலி பொதுமக்கள் பீதி


கோத்தகிரியில் குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தைப்புலி பொதுமக்கள் பீதி
x
தினத்தந்தி 5 Jun 2017 4:00 AM IST (Updated: 5 Jun 2017 1:38 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரியில் குடியிருப்பு பகுதியில் சிறுத்தைப்புலி ஒன்று சுற்றித்திரிவதால் பொதுமக்கள் பீதியடைந்து உள்ளனர். சிறுத்தைப்புலி நடமாட்டம் கோத்தகிரியில் உள்ள காமராஜர் சதுக்கத்தில் இருந்து லூக்ஸ் சர்ச் சாலையில் என்.சி.எம்.எஸ். உரக்கிடங்கு, தீயணைப்பு நிலையம்,

கோத்தகிரி,

கோத்தகிரியில் குடியிருப்பு பகுதியில் சிறுத்தைப்புலி ஒன்று சுற்றித்திரிவதால் பொதுமக்கள் பீதியடைந்து உள்ளனர்.

சிறுத்தைப்புலி நடமாட்டம்

கோத்தகிரியில் உள்ள காமராஜர் சதுக்கத்தில் இருந்து லூக்ஸ் சர்ச் சாலையில் என்.சி.எம்.எஸ். உரக்கிடங்கு, தீயணைப்பு நிலையம், ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த நிலையில் சில நாட்களாக அந்த பகுதியில் சிறுத்தைப்புலி ஒன்று சுற்றித்திரிகிறது. சிறுத்தைப்புலி குடியிருப்புக்குள் புகுந்து அங்கு 2 நாய்களை கடித்து கொன்றுள்ளது.

இதை தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள ரிக்கிராஜ் என்பவர் தனது வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவை பார்த்தார். அதில் சிறுத்தைப்புலி ஒன்று தீயணைப்பு நிலையம் பின்புறம் இருந்து அவரது வீட்டின் சுற்றுச்சுவர் மீது நடந்து செல்வது பதிவாகி உள்ளது. எனவே குடியிருப்பு பகுதியில் சிறுத்தைப்புலி நடமாட்டம் இருப்பது உறுதியானது.

பொதுமக்கள் பீதி

இதனால் அந்த பகுதி பொதுமக்கள் பீதியடைந்து உள்ளனர். இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:–

குடியிருப்பு பகுதியில் சிறுத்தைப்புலி சுற்றித்திரிவதால் இரவு நேரத்தில் வெளியிடங்களுக்கு செல்ல முடியவில்லை. எனவே அசம்பாவித சம்பவம் நடைபெறும் முன்பு சிறுத்தைப்புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும். அல்லது சிறுத்தைப்புலியை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தீவீரமாக கண்காணிப்பு

கோத்தகிரி வனச்சரகர் சீனிவாசன் கூறுகையில், கோத்தகிரியில் குடியிருப்பு பகுதியில் சிறுத்தைப்புலி நடமாட்டம் இருப்பது குறித்து பொதுமக்கள் இதுவரை புகார் தெரிவிக்கவில்லை. சிறுத்தைப்புலி ஓரிடத்தில் நிலையாக இருக்க வாய்ப்பில்லை. வழி தவறி குடியிருப்புக்குள் வந்திருக்கலாம். எனினும் சிறுத்தைப்புலியின் நடமாட்டத்தை தீவீரமாக கண்காணித்து வருகிறோம், என்றார்.


Next Story