திருப்பூர் மாவட்டத்தில் 7 பேருக்கு துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களாக பதவி உயர்வு
திருப்பூர் மாவட்டத்தில் 7 பேருக்கு துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களாக பதவி உயர்வு வழங்கி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி பிரிவில் உதவியாளர் நிலையில் பணியாற்றிய 7 பேருக்கு துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அந்தவகையில் திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் உதவியாளராக பணியாற்றி வந்த பழனிச்சாமி திருப்பூர் ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (ஊராட்சிகள்), மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவியாளராக பணியாற்றி வந்த ராஜேந்திரன் மடத்துக்குளம் ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (பொது) பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
இதுபோல் ஊத்துக்குளி ஒன்றியத்தில் உதவியாளராக பணியாற்றி வந்த ஆறுமுகம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வளர்ச்சி பிரிவு துணை வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (நிர்வாகம்), ஊத்துக்குளி ஒன்றியத்தில் கணக்கராக (பொது) பணியாற்றி வந்த யசோதா ஊத்துக்குளி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (சத்துணவு) நியமிக்கப்பட்டுள்ளனர்.
மடத்துக்குளம் ஒன்றியம்பொங்கலூர் ஒன்றியத்தில் உதவியாளராக பணியாற்றி வந்த விஜயன் மடத்துக்குளம் ஒன்றியத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (ஊராட்சிகள்), திருப்பூர் ஒன்றியத்தில் உதவியாளராக பணியாற்றி வந்த விஜயலட்சுமி பொங்கலூர் ஒன்றியத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (சத்துணவு), திருப்பூர் ஊரக வளர்ச்சி முகமையின் உதவியாளராக பணியாற்றி வந்த ஜெகநாதன் திருப்பூர் ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (சத்துணவு) பதவி உயர்வு வழங்கி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.