ஸ்ரீவைகுண்டத்தில் குழாயில் வந்த கலங்கலான குடிநீர்

ஸ்ரீவைகுண்டம்,
ஸ்ரீவைகுண்டம் நகர பஞ்சாயத்து பகுதிகளில் கடந்த சில நாட்களாக குழாயில் குடிநீர் கலங்கிய நிலையிலும், லேசான பச்சை நிறத்திலும் வினியோகம் செய்யப்படுகிறது. ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவில் தெப்பக்குளம் அருகில் குடிநீரை சுத்தப்படுத்துவதற்காக சுத்திகரிப்பு மையம் உள்ளது.
ஸ்ரீவைகுண்டம் அணையில் உறைகிணற்றில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரை, சுத்திகரிப்பு மையத்தில் சுத்தம் செய்து, ஸ்ரீவைகுண்டம் நகர பஞ்சாயத்தில் உள்ள 18 வார்டுகளுக்கும் வினியோகம் செய்வது வழக்கம். தற்போது சுத்திகரிப்பு மையத்துக்கு தண்ணீரை அனுப்பாமல், நேரடியாக வினியோகம் செய்வதாக கூறப்படுகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குடிநீரை சுத்திகரிப்பு மையத்தில் சுத்தம் செய்து வினியோகம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Related Tags :
Next Story