வானக்கன்காட்டில் ஜல்லிக்கட்டு: காளைகள் தூக்கி வீசியதில் 17 பேர் காயம்


வானக்கன்காட்டில் ஜல்லிக்கட்டு: காளைகள் தூக்கி வீசியதில் 17 பேர் காயம்
x
தினத்தந்தி 5 Jun 2017 4:15 AM IST (Updated: 5 Jun 2017 2:49 AM IST)
t-max-icont-min-icon

வடகாடு அருகே உள்ள வானக்கன்காட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் தூக்கி வீசியதில் 17 பேர் காய மடைந்தனர்.

வடகாடு,

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு அருகே உள்ள வானக்கன்காட்டில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழாவை முன்னிட்டு, நேற்று வாடிவாசல் அமைக்கப்பட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது. ஜல்லிக்கட்டை மாவட்ட வருவாய் அலுவலர் ராமசாமி தொடங்கி வைத்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு லோகநாதன் முன்னிலை வகித்தார். முதலில் வாடிவாசலில் இருந்து கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இந்த காளைகளை மாடுபிடி வீரர்களும் யாரும் பிடிக்கவில்லை.

652 காளைகள்

அதனை தொடர்ந்து புதுக்கோட்டை, மதுரை, திருச்சி, தஞ்சாவூர், கரூர் சிவகங்கை, திண்டுக்கல், ராமநாதபுரம் உள்பட்ட பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட 652 காளைகள் ஒவ்வொன்றாக வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன. அப்போது சீறிப்பாய்ந்து வந்த காளைகளை, 116 மாடு பிடி வீரர்கள் போட்டி, போட்டு அடக்கினர். இதில் சில காளைகள் மாடு பிடிவீரர்களை தூக்கி வீசியதில் 17 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். இதில் 4 பேர் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பரிசுகள்

பின்னர் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் கட்டில், பீரோ, சைக்கிள் உள்பட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த ஜல்லிக்கட்டை புதுக்கோட்டை, வடகாடு, கீரமங்கலம், ஆலங்குடி மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை வடகாடு போலீசார் செய்திருந்தனர்.


Next Story