பூண்டி ஏரி முழுமையாக வறண்டது


பூண்டி ஏரி முழுமையாக வறண்டது
x
தினத்தந்தி 5 Jun 2017 4:00 AM IST (Updated: 5 Jun 2017 3:55 AM IST)
t-max-icont-min-icon

பூண்டி ஏரி முழுமையாக வறண்டு காணப்பட்டது.

செங்குன்றம்

சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி விளங்குகிறது. பொதுப்பணித்துறையினரால் ரூ.65 லட்சம் செலவில் கடந்த 1940-ம் ஆண்டு பூண்டி ஏரி கட்டப்பட்டது. 16 பெரிய மதகுகளை கொண்ட இந்த ஏரியின் கொள்ளளவு 3 ஆயிரத்து 231 மில்லியன் கன அடி. இந்த ஏரி 1944-ம் ஆண்டு ஜூன் மாதம் 14-ந் தேதி அப்போதைய சென்னை மேயராக இருந்த ஆர்தர் ஹோப் என்பவரால் திறக்கப்பட்டது. கிருஷ்ணா நதி நீர் ஒப்பந்தப்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கடந்த மார்ச் மாதம் நிறுத்தப்பட்டது. கண்டலேறு அணையில் நீர்மட்டம் குறைந்ததையடுத்து தண்ணீர் நிறுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது பூண்டி ஏரிக்கு நீர்வரத்து இல்லை.

முழுமையாக வறண்டது

பருவ மழை பொய்த்ததன் காரணமாகவும் சுட்டெரிக்கும் வெயில் காரணமாகவும் பூண்டி ஏரியின் நீர்மட்டம் அடியோடு குறைந்துவிட்டது. தற்போது பூண்டி ஏரி முழுமையாக வறண்டு பாலைவனமாக காட்சி அளிக்கிறது. நேற்று காலை நிலவரப்படி பூண்டி ஏரியில் வெறும் 35 மில்லியன் கன அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளளது. பேபி கால்வாய் வழியாக வினாடிக்கு 10 கனஅடி வீதம் சென்னை மக்களின்குடிநீர் தேவைக்காக செம்பரம்பாக்கம் ஏரிக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் நேற்று முதல் நிறுத்தப்பட்டது.

பூண்டி ஏரியில் தண்ணீரின்றி காணப்படுவதால் அந்த பகுதியில் உள்ளவர்கள் ஆடு, மாடுகளை மேய்த்து வருகின்றனர். 

Next Story