ஹிட்லரின் பெருங்கனவு!
முதல் உலகப் போரில் ஜெர்மனி படையில் ராணுவ வீரராக இருந்த ஹிட்லர், இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மனியின் சர்வாதிகாரியாக விளங்கினார்.
ஹிட்லரின் வாழ்க்கை, பல திருப்பங்களும், திடுக்கிடும் சம்பவங்களும் நிறைந்தது. அதில் சிலவற்றை பார்ப்போம்..!
ஆஸ்திரியாவில் உள்ள பிரானவ் என்ற ஊரில் 1889-ம் ஆண்டு பிறந்தவர் அடால்ப் ஹிட்லர். சிறு வயதில் தான் ஓவியராக வேண்டும் என்று விரும்பினார். ஆனால் அவரது ஆசை நிறைவேறவில்லை. இருந்தாலும் வாழ்வில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட அவர் ராணுவத்தில் சேர்வது என்று முடிவு செய்தார். படைப்பிரிவிலும் சேர்ந்துவிட்டார்.
உலகின் மிகச்சிறந்தவர்கள் ஜெர்மனியர்கள் என்ற பெருமிதம் அவரது மனதில் ஆழமாக பதிந்திருந்தது. அதை மற்றவர் களிடமும் கூறி வந்தார். அவரது இனப்பற்று உலகை வழிநடத்தும் தகுதி உடையவர்கள் ஜெர்மானியர்கள் மட்டும்தான் என்ற சர்வாதிகார எண்ணமாகவும் மாறியது. எதிர்ப்பாளர்களை எல்லாம் ஒழித்துவிட்டு, ஜெர்மனியின் சர்வாதிகாரி ஆனார் ஹிட்லர்.
ஹிட்லர் வாழ்ந்த காலத்தில் அவரின் பெரும் முயற்சியால் ஜெர்மனி ராணுவத் தொழில்நுட்பத்திலும், விஞ்ஞானத்திலும் மிகப்பெரிய முன்னேற்றம் அடைந்திருந்தது. “ஒரு தலைவனின் கடமை நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதும், வேலை இல்லாமையை ஒழிப்பதும், இந்நாட்டை சேர்ந்தவன் நான் என்று பெருமிதமாக கூறிகொள்ளும் நிலைமையை உருவாக்குவதுமே” என்று கூறினார். ஹிட்லர் தனது ஆட்சிக் காலத்தில் அத்தகைய தலைவனாக திகழ்ந்தார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் சர்வாதிகார எண்ணம், அவரது சாதனைகளை மறக்க வைத்து, கொடுங்கோல் மன்னனாக உலகை பார்க்க வைத்துவிட்டது.
ஹிட்லர் ஆட்சிப் பொறுப்பு ஏற்றபோது, ஜெர்மனிப் படை ஐரோப்பாவின் மிகப் பிரமாண்டமான ராணுவமாக மாறியது. நவீன போர் விமானங்கள், பீரங்கிகள், துப்பாக்கிகள், டாங்கிகள் கொண்ட அசுர சக்தியாக ஜெர்மனியின் ராணுவம் மாறிய வேகம், உலக வரலாற்றிலேயே அதுவரை நிகழ்ந்திடாத பெரிய ஆச்சரியம் என்று ஆராய்ச்சியாளர்கள் இன்றும் வியந்து கொண்டிருக்கிறார்கள். ஹிட்லரின் தவறுகளால், அவரை பற்றிய நினைவுகள் உலக சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டது. அவரின் சாதனைகளும் கூடவே மறக்கப்பட்டுவிட்டன.
1945-ல் இறந்த ஹிட்லர் “எந்த ஜெர்மன் நாட்டு மண்ணுக்காகக் கடந்த 12 ஆண்டு காலமாகப் பாடுபட்டு வந்தேனோ, அந்த ஜெர்மன் மண்ணிலேயே என்னை எரித்துவிட வேண்டும். இதுவே என் கடைசி ஆசை. முதல் உலகப்போரில் ஒரு சாதாரணப் போர் வீரனாக கலந்துகொண்டவன் நான். ஜெர்மனி மண்ணின் மீதும், மக்கள் மீதும் நான் கொண்ட பற்றும், பாசமும்தான் என்னை வழிநடத்தின. என்சக்தி முழுவதையும் என் தாய் நாட்டின் மேன்மைக்காகச் செலவிட்டிருக்கிறேன். இந்தப் போரினால் நம்நாடு சந்தித்த பயங்கர விளைவுகள், நாசமாக்கப்பட்ட பிரமாண்டமான மாளிகைகள், தரைமட்ட மாக்கப்பட்ட கலையம்சமிக்க நினைவுச் சின்னங்கள் யாவும் நம் மீது உலக நாடுகள் நடத்திய கோரத் தாக்குதலை நம்முடைய பிற்கால சந்ததியினருக்கு உணர்த்திக்கொண்டு இருக்கும்” இவ்வாறு ஹிட்லர் இறுதிச் சாசனம் எழுதிக் கையெழுத்திட்டார் என்று வரலாற்று நூல்கள் குறிப்பிடுகின்றன.

Related Tags :
Next Story