ஓட்டேரி தெருவில் மலைபோல் குவிந்த குப்பை கழிவு நாளை பள்ளிகள் திறக்கும் முன்பு அகற்றப்படுமா?
சென்னை ஓட்டேரி செல்லப்பா தெருவின் இரு புறங்களிலும் குப்பை கழிவுகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன.
சென்னை,
சென்னை ஓட்டேரி செல்லப்பா தெருவில் மாநகராட்சி தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியையொட்டி எட்வர்ட் பூங்கா தெரு உள்ளது.
இந்த தெருவின் இரு புறங்களிலும் குப்பை கழிவுகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் கூறியதாவது:–
குவிந்து கிடக்கும் குப்பை கழிவுகளில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த தெருவை கடந்து செல்லும்போது முகத்தை மூடிக் கொண்டு செல்லும் அவலநிலை உள்ளது. குப்பைகளை அப்புறப்படுத்த மாநகராட்சி சுகாதாரத்துறை பணியாளர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கோடை விடுமுறைக்கு பின் நாளை(புதன்கிழமை) பள்ளிகள் திறக்க உள்ளன. எனவே மாநகராட்சி பள்ளிக்கூடத்தை ஒட்டி குவிந்துள்ள குப்பை
கழிவுகளால் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குப்பை தொட்டிகள் இருந்தாலும் சாலைகள், தெருக்களிலேயே சிலர் குப்பையை கொட்டுகிறார்கள். அவர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் வரும் நாட்களில் மீண்டும் குப்பை கழிவுகள் சேராமல் தெருக்கள் தூய்மையாக இருக்கும். மக்களும் எந்தவித சிரமமும் இன்றி தெருகளில் நடந்து செல்ல வசதியாக அமையும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story