தாம்பரம்–மதுரவாயல் பைபாஸ் சாலையில் சரக்கு வேன் கவிழ்ந்து விபத்து போக்குவரத்து பாதிப்பு
தாம்பரம்–மதுரவாயல் பைபாஸ் சாலையில் கட்டுமான பொருட்களை ஏற்றிக்கொண்டு சென்ற சரக்கு வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தாம்பரம்,
சென்னையை அடுத்த தாம்பரத்தில் இருந்து மதுரவாயல் நோக்கி நேற்று காலை கட்டுமான பொருட்களை ஏற்றிக்கொண்டு சரக்கு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த வேனை தாம்பரம், புலிகொறடு, காமராஜர் தெருவை சேர்ந்த ரங்கநாதன்(வயது 33) என்பவர் ஓட்டிச்சென்றார்.
தாம்பரத்தை அடுத்து மதுரவாயல் பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென வேனின் டயர் வெடித்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் எதிர்பாராதவிதமாக நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் இருந்த ரங்கநாதனுக்கு அதிர்ஷ்டவசமாக காயம் ஏதும் ஏற்படவில்லை.
வாகனங்கள் அணிவகுத்து நின்றன
இதனால் அங்கு போக்கு
வரத்து பாதிக்கப்பட்டது. விபத்துக்குள்ளான வேனுக்கு பின்னால் வந்த வாகனங்கள் மேற்கொண்டு செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. அரசு பஸ்களும் செல்ல முடியாமல் தவித்ததால், அதில் இருந்த பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் மற்றும் குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விரைந்து சென்றனர்.
அப்புறப்படுத்தினார்கள்
பின்பு போலீசார் விபத்துக்குள்ளான லாரியை, மற்றொரு லாரியில் கயிறு மூலம் கட்டி, சாலையின் ஓரம் கொண்டு சென்று அப்புறப்படுத்தினார்கள். இதனால் அங்கு 3 மணி நேரத்திற்கு பிறகு போக்குவரத்து சீரானது.
அதன்பின்னர் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்ற வாகனங்கள் ஒவ்வொன்றாக புறப்பட்டு சென்றன.
Related Tags :
Next Story