கணபதிபாளையம் அருகே டாஸ்மாக் கடையை பொதுமக்கள் முற்றுகையிட முயற்சி
கணபதிபாளையம் நால்ரோடு அருகே டாஸ்மாக் கடையை பொதுமக்கள் முற்றுகையிட முயற்சி
மொடக்குறிச்சி,
கணபதிபாளையம் நால்ரோடு அருகே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்றார்கள்.
மொடக்குறிச்சி, நஞ்சை ஊத்துக்குளி எழுமாத்தூர், கருமாண்டம்பாளையம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் குடிமகன்கள் மதுவாங்க அறச்சலூர், சிவகிரி, வடக்குபுதுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சுமார் 20 தொலைவிற்கு சென்று வந்தனர்.
இந்நிலையில் மொடக்குறிச்சி அருகே புஞ்சை காளமங்கலம் ஊராட்சி சின்னம்மாபுரம் அடுத்த நஞ்சப்பகவுண்டன்புதூர் பகுதியில் புதிய டாஸ்மாக் கடை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. திஙகள்கிழமை மதியம் அதிரடியாக கடை திறந்த அதிகாரிகளை முற்றுகையிட பொதுமக்கள் ஒன்று திரண்டு அப்பகுதிக்கு விரைந்து வந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து விரைந்துவந்த மலையம்பாளையம் போலீசார் பொதுமக்களை தடுத்து நிறுத்தி ஈரோடு மாவட்ட டாஸ்மாக் மேலாளரிடம் பேசி விரைவில் திறக்கப்பட்ட கடையை வேறு இட்த்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததை தொடர்ந்து அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனர்.
இதனால் சுமார் இரண்டுமணிநேரம் பரபரப்பு நிலவியது. இதுகுறித்து அப்பகுதிமக்கள் விரைவில் கடையை மூடாவிட்டால் மாபெரும் சாலைமறியல் போராட்டம் நடைபெறும் என்று தெரிவ்த்தனர்.