திருவள்ளூர் மாவட்டத்தில் 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் கலெக்டர் தொடங்கி வைத்தார்
திருவள்ளூர் மாவட்டத்தில் 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் கலெக்டர் தொடங்கி வைத்தார்
திருவள்ளூர்,
திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் நேற்று உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வனத்துறை சார்பில் மாவட்டம் முழுவதும் 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்ட தொடக்க விழா நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி தலைமை தாங்கி, மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இதில் மாவட்ட வன அலுவலர் முகமது ஷபாப் மற்றும் வனத்துறை அலுவலர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
திருவள்ளூர் நகராட்சி அலுவலகத்தில் ஆணையர் செந்தில்குமரன் தலைமையில் சுகாதார அலுவலர்கள், நகராட்சி பணியாளர்கள், நகர குடியிருப்பு சங்க நிர்வாகிகள் சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்து உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.
Related Tags :
Next Story