மாட்டு இறைச்சி தடை உத்தரவு நகல் எரிப்பு போராட்டம் விவசாய சங்கத்தினர் 15 பேர் கைது


மாட்டு இறைச்சி தடை உத்தரவு நகல் எரிப்பு போராட்டம் விவசாய சங்கத்தினர் 15 பேர் கைது
x
தினத்தந்தி 6 Jun 2017 4:30 AM IST (Updated: 6 Jun 2017 3:13 AM IST)
t-max-icont-min-icon

மாட்டு இறைச்சி தடை உத்தரவு நகல் எரிப்பு போராட்டம் நடத்திய விவசாய சங்கத்தினர் 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாட்டு இறைச்சி தடை உத்தரவு நகல் எரிப்பு போராட்டம் நேற்று காலை பழைய பஸ் நிலையம் முன்பு நடந்தது.

போராட்டத்துக்கு மாவட்ட செயலாளர் பெருமாள் தலைமை தாங்கினார். போராட்டத்தின் போது, மாட்டு இறைச்சி தடை சட்டத்தை திரும்ப பெற வேண்டும். மாடுகள் விற்பதற்கு, வாங்குவதற்கு விதிக்கப்பட்டு உள்ள தடையை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து உத்தரவு நகலை தீ வைத்து எரித்தனர்.

15 பேர் கைது

இதைத் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்த தூத்துக்குடி மத்தியபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 15 பேரை கைது செய்தனர்.


Related Tags :
Next Story