மாட்டு இறைச்சி உண்ணும் போராட்டம் மக்கள் அதிகாரம் இயக்கத்தினர் 32 பேர் கைது
திருவாரூரில் மாட்டு இறைச்சி உண்ணும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிகாரம் இயக்கத்தினர் 32 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர்,
கால்நடை சந்தைகளில் இறைச்சிக்காக மாடுகளை விற்கவும், வாங்கவும் மத்திய அரசு விதித்த தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் மாட்டு இறைச்சிக்கு தடைவிதித்த மத்திய அரசை கண்டித்து திருவாரூர் பஸ் நிலையம் அருகில் மக்கள் அதிகாரம் இயக்கம் சார்பில் மாட்டு இறைச்சி உண்ணும் போராட்டம் நேற்று நடந்தது. போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் முரளி தலைமை தாங்கினார். போராட்டத்தில், மாட்டு இறைச்சிக்கு தடைவிதித்த மத்திய அரசை கண்டித்தும், சென்னையில் மாட்டு இறைச்சி உண்ணும் போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாவட்ட ஒருங்கிணைப் பாளர் சண்முகசுந்தரம், நிர்வாகிகள் ஆசாத், ஸ்ரீதர், ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
32 பேர் கைது
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்து போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 32 பேரை கைது செய்தனர்.

Related Tags :
Next Story