ஆதிதிராவிட மக்களை அனைத்து திட்டங்களும் சென்றடைய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
அரசின் அனைத்து திட்டங்களும் ஆதிதிராவிட மக்களுக்கு முழுமையாக சென்றடைய மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும், என்று புதுடெல்லி தேசிய ஆணைய துணை தலைவர் முருகன் கூறினார்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று புதுடெல்லி தேசிய ஆதிதிராவிடர் ஆணைய துணை தலைவர் என்.முருகன் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம், போலீஸ் சூப்பிரண்டு அருளரசு, புதுடெல்லி தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய இயக்குனர் மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆய்வுக்கூட்டத்தில் ஆணைய துணை தலைவர் முருகன் பேசும்போது கூறியதாவது:-
ஆதிதிராவிட மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சலுகைகளையும், நலத்திட்டங்களையும் அறிவித்து செயல்படுத்தி வருகின்றன. இந்த மக்களை மேம்படுத்துவதற்காக பல்லாயிரம் கோடி ரூபாய் நிதியினை வழங்கி வருகிறது. அரசின் அனைத்து திட்டங்களும் ஆதிதிராவிட மக்களுக்கு முழுமையாக சென்றடையும் பொருட்டு அரசு துறை அலுவலர்கள் அனைத்து திட்டங்கள் குறித்தும் ஆதிதிராவிட மக்களிடையே எடுத்துக்கூறி விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும்.
மாணவர் சேர்க்கை
ஆதிதிராவிட மக்களுக்கு வழங்கப்படுகின்ற நலத்திட்டங்கள், கடன் உதவிகள், மானியத்திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு முழுமையாக கிடைக்கின்றதா? என்பதை அந்தந்த துறை சார்ந்த அலுவலர்கள் நேரில் ஆய்வு செய்ய வேண்டும்.
வன்கொடுமையால் பாதிக்கப்படுவோருக்கு அரசால் வழங்கப்படுகின்ற தொகையினை உடனுக்குடன் வழங்கிட வேண்டும். பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை முழுமையாக நடைபெறுகிறதா ? என்பதை ஆய்வு செய்வதோடு, ஆதி திராவிட மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகளில் முழுமையாக இடம் கிடைத்துள்ளதா? என்பதையும், தொடர்ந்து கண்காணித்து உறுதி செய்திட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தமிழகத்திற்கு 5-வது இடம்
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-
ஆதிதிராவிடர் மீதான தாக்குதல் தொடர்பான வழக்கு எண்ணிக்கையில் தேசிய அளவில் தமிழகம் 5-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் இதுபோன்ற 1,890 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதிலும் 1,214 வழக்குகள் கடந்த ஓராண்டு காலத்தில் பதிவு செய்யப்பட்டது ஆகும்.
துணை போலீஸ் சூப்பிரண்டு விஷ்ணுபிரியா வழக்கை விரைந்து முடிக்க சி.பி.ஐ.க்கு ஆணையத்தின் சார்பில் கடிதம் எழுத உள்ளோம். கோகுல்ராஜ் குடும்பத்திற்கு நிவாரண தொகை வழங்கப்பட்டு உள்ளது. ஆவண கொலைகளை தடுக்க பொதுமக்கள் இடையே தமிழக அரசுடன் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பழனிச்சாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மாலதி, மாவட்ட வன அலுவலர் காஞ்சனா, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் முரளிகிருஷ்ணன், உதவி கலெக்டர்கள் ராஜசேகரன், கீர்த்தி பிரியதர்ஷினி மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story