சேலம் டவுன் ரெயில் நிலையம் எதிரில் மதுக்கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
சேலம் டவுன் ரெயில் நிலையம் எதிரில் உள்ள மதுக்கடையை முற்றுகையிட்டு நேற்று பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம்,
சேலம் டவுன் ரெயில் நிலையம் எதிரில் உள்ள மதுக்கடையை அகற்றக்கோரி இந்திய புரட்சிகர மார்க்சிஸ்டு கட்சி, தமிழ்நாடு பெண்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று காலை தமிழ்நாடு பெண்கள் சங்கத்தின் நிர்வாகி மஞ்சுபாபு தலைமையில் ஏராளமானவர்கள் டவுன் ரெயில் நிலையம் அருகில் திரண்டனர்.
இதில் இந்திய புரட்சிகர மார்க்சிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் ராஜ், மாநகர செயலாளர் வெங்கடேஷ், ஆட்டோ சங்க அமைப்பாளர் கமால்பாஷா மற்றும் தமிழ்நாடு தொழிற்சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள், பெண்கள் அமைப்பை சேர்ந்தவர்கள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர். பின்னர், அவர்கள் டவுன் ரெயில் நிலையம் எதிரில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள மதுக்கடையை அகற்றக்கோரி கோஷங்களை எழுப்பினர். மேலும் மதுக்கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் பேச்சுவார்த்தை
இதனால் மதியம் 12 மணிக்கு திறக்க வேண்டிய மதுக்கடை திறக்கப்படாமல் இருந்தது. ஒருபுறம் பொதுமக்களின் போராட்டம் நடந்து கொண்டிருந்தாலும், மறுபுறம் கடை எப்போது திறக்கும் என்று மதுபிரியர்கள் சற்று தூரத்தில் நின்று காத்திருந்ததை காணமுடிந்தது.
சேலம் டவுன் போலீஸ் உதவி கமிஷனர் அன்பு தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் குமரேசன், கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால் மதுக்கடையை மூடக்கோரியும், பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரியும் பொதுமக்கள் தொடர்ந்து கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து மதுக்கடையை மூடுவது குறித்து டாஸ்மாக் அதிகாரிகளிடம் எடுத்துக்கூறி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. அதையொட்டி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சமாதானம் அடைந்து அங்கிருந்து கலைந்து சென்றனர். பொதுமக்களின் போராட்டத்தால் சுமார் ¾ மணி நேரம் மதுக்கடை திறக்கப்படாமல் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story