தாரமங்கலத்தில் கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் சாவு நண்பர்களிடம் விசாரணை
தாரமங்கலத்தில் கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார். அவருடன் வந்த நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தாரமங்கலம்,
ஓமலூர் அருகே உள்ள சின்னத்திருப்பதி அழகனம்பட்டியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகன் பிரவின்(வயது18). இவர் சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். சி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவருடன் அதே ஊரை சேர்ந்த இரட்டையர்களான அகில்(19), நிதின், ஓமலூரை சேர்ந்த அசோக்(17) ஆகியோர் கல்லூரியில் படித்து வருகிறார்கள். ஆட்டுக்காரனூரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(19). இவர்கள் அனைவரும் நண்பர்கள் ஆவார்கள்.
நேற்று இவர்கள் அனைவரும் தாரமங்கலம் அருகில் துட்டம்பட்டியில் உள்ள நீச்சல்குளத்தில் நீந்தி குளிக்க வந்தார்கள். அங்கு நீச்சல்குளம் மூடியிருந்தது.
தண்ணீரில் மூழ்கி சாவு
இதனால் அவர்கள் தாரமங்கலம் 4-வது வார்டு சங்ககிரி ரோட்டில் உள்ள ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் நீந்தி குளித்தனர். அப்போது பிரவின் திடீரென தண்ணீரில் மூழ்கினார். இதனால் உடன் வந்த மற்ற மாணவர்கள் கதறி அழுதனர். இதை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் பார்த்து அங்கு வந்து கிணற்றில் இறங்கி பிரவினின் உடலை தேடி பார்த்தனர். ஆனால் பிரவின் உடல் கிடைக்க வில்லை. அவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்து தாரமங்கலம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதையொட்டி இன்ஸ்பெக்டர் குமரன், சப்- இன்ஸ்பெக்டர் மாணிக்கம் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். கிணறு ஆழமாக இருந்ததாலும், தண்ணீர் அதிகமாக இருந்ததாலும் மோட்டார் வைத்து தண்ணீரை வெளியேற்றி பிரவின் பிணம் மீட்கப்பட்டது. பின்னர் அவரது உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இறந்த மாணவன் பிரவினின் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் பார்த்து கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.
பிரவின் நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி இறந்தாரா? என்பது குறித்து அவருடன் வந்த நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story