‘தாயின் ஆசியோடு தர்ம யுத்தத்தில் வெற்றி பெறுவேன்’ ஓ.பன்னீர்செல்வம் சூளுரை


‘தாயின் ஆசியோடு தர்ம யுத்தத்தில் வெற்றி பெறுவேன்’ ஓ.பன்னீர்செல்வம் சூளுரை
x
தினத்தந்தி 7 Jun 2017 5:00 AM IST (Updated: 6 Jun 2017 10:57 PM IST)
t-max-icont-min-icon

‘‘தாயின் ஆசியோடு தர்ம யுத்தத்தில் வெற்றி பெறுவேன்’’ என்று உத்தமபாளையத்தில் நடந்த விழாவில் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

தேனி,

‘‘தாயின் ஆசியோடு தர்ம யுத்தத்தில் வெற்றி பெறுவேன்’’ என்று உத்தமபாளையத்தில் நடந்த விழாவில் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

தர்ம யுத்தம்

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் நேற்று நடந்த ஒரு விழாவில் முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

எத்தனையோ உறவுகள் வந்தாலும், உயிர் தந்த உறவான தாய் தான் தெய்வம். அம்மா என்று சொல்லும்போது ஒரு சக்தி வருகிறது. எழுச்சி பிறக்கிறது; நம்பிக்கை பிறக்கிறது; நிம்மதி கிடைக்கிறது.

வேதனை, சோதனைகள் வரும் போது தானாக பிறக்கும் சொல் தான் அம்மா. தாயை நேசிப்பவர்கள், தாயை பூஜிப்பவர்கள் தான் சாதனை படைத்து இருக்கிறார்கள். நானும் தாயை நேசிப்பவன். தாயை பூஜிப்பவன். தாய்க்காக தான் தர்ம யுத்தத்தை தொடங்கி உள்ளேன். அந்த தாயின் ஆசியோடு இந்த தர்ம யுத்தத்தில் வெற்றி பெறுவேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

குழப்பமான சூழல்

நிகழ்ச்சி முடிந்ததும் ஓ.பன்னீர்செல்வத்திடம் நிருபர்கள் பேட்டி எடுக்க முயன்றனர். டி.டி.வி.தினகரன் ஜாமீனில் வெளி வந்துள்ளது குறித்தும், அமைச்சர் ஜெயக்குமாரின் கருத்துகள் குறித்தும் ஓ.பன்னீர்செல்வத்திடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர், ‘தற்போது நிலவி வரும் குழப்பமான சூழ்நிலையில் பேட்டி அளிக்க விரும்பவில்லை’ என்று கூறிவிட்டு காரில் புறப்பட்டுச் சென்றார்.

செல்லும் வழியில் உத்தமபாளையம் பஸ் நிலையம் எதிரே ஒரு டீக்கடை முன்பு தனது காரை நிறுத்தச் சொன்னார். பின்னர், அந்த டீக்கடையில் தனது ஆதரவாளர்களுடன் டீ குடித்து விட்டு அங்கிருந்து பெரியகுளத்திற்கு புறப்பட்டு சென்றார்.


Next Story