ஆண்டிப்பட்டியில் பஸ் நிலையத்தை புறக்கணிக்கும் பஸ்கள் பொதுமக்கள் அவதி


ஆண்டிப்பட்டியில் பஸ் நிலையத்தை புறக்கணிக்கும் பஸ்கள் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 7 Jun 2017 3:45 AM IST (Updated: 6 Jun 2017 10:57 PM IST)
t-max-icont-min-icon

ஆண்டிப்பட்டியில் பஸ் நிலையத்தை புறக்கணிக்கும் பஸ்களால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

ஆண்டிப்பட்டி,

ஆண்டிப்பட்டியில் பஸ் நிலையத்தை புறக்கணிக்கும் பஸ்களால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

வேகமாக செல்லும் பஸ்கள்

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி நகருக்குள் வரும் அனைத்து பஸ்களும் பஸ் நிலையத்துக்குள் வந்து செல்ல வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. தேனியில் இருந்து மதுரை நோக்கி வரும் பஸ்களும், மதுரை, திருமங்கலம் பகுதிகளில் இருந்து வரும் பஸ்களும் ஆண்டிப்பட்டி பஸ் நிலையத்துக்குள் சென்று பயணிகளை இறக்கி விட்டு மீண்டும் பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்கிறது.

ஆனால் ஒரு சில தனியார் பஸ்கள், அரசு பஸ்களோடு போட்டி போட்டுக்கொண்டு பஸ் நிலையத்துக்குள் செல்லாமல் வெளிப்பகுதியில் நிறுத்தி பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்கிறது. வேகமாக சென்று விடலாம் என்ற ஆவலில் பயணிகளும் தனியார் பஸ்களையே நாடுகின்றனர்.

அரசு பஸ்கள்

இதே போல் சில அரசு பஸ்களும் பஸ் நிலையத்துக்குள் வராமல் சென்று விடுகிறது. ஏற்கனவே போக்குவரத்து நெரிசலால் சிக்கித்தவிக்கும் ஆண்டிப்பட்டியில் இதுபோன்று பஸ் நிலையத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டு பயணிகளை இறக்கி, ஏற்றிச்செல்லும் பஸ்களால் மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. அனைத்து பஸ்களும் பஸ் நிலையத்துக்குள் செல்ல வேண்டும் என்று உத்தரவிட்ட அரசு அதிகாரிகளும், இதுபோன்ற செயல்களை தடுக்க முயற்சி செய்யவில்லை. எனவே ஆண்டிப்பட்டியில் அனைத்து பஸ்களும் பஸ் நிலையத்துக்குள் வந்து செல்ல சம்பந்தபட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story