கருப்பட்டிக்கு உரிய விலை கிடைக்கவில்லை, பரிதவிக்கும் பனை தொழிலாளர்கள்
பனைதொழிலாளர்களின் துயர் துடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
சாயல்குடி,
சாயல்குடி அருகே மாரியூர், நரிப்பையூர், கன்னிராஜபுரம், பூப்பாண்டியபுரம், கூராங்கோட்டை, பெரியகுளம், ஒப்பிலான், கடுகுசந்தை சத்திரம், மேலச்செல்வனூர், காவாகுளம், கீழக்கிடாரம், மேலக்கிடாரம், கிருஷ்ணாபுரம், மூக்கையூர், எல்லைப்புஞ்சை, மாணிக்கநகர், வெட்டுக்காடு உள்ளிட்ட கிராமங்களில் பனைத் தொழிலை மட்டுமே நம்பி சுமார் 10 ஆயிரம் குடும்பங்கள் உள்ளன.
இவர்களில் 90 சதவீதத்தினருக்கு பனை மரங்கள் சொந்தமாக இருப்பதில்லை பனைமரம் உள்ள நிலங்களின் உரிமையாளர்களிடம் பனைகளை குத்தகைக்கு எடுத்து பதநீர் இறக்குகிறார்கள்.
கணவன் பனை ஏறினால் அவருக்கு உதவியாக அவருடைய மனைவி அல்லது குழந்தைகள் உடன் சென்று உதவுகின்றனர். இதனால் குழந்தைகளின் கல்வி பாதித்து இடைநிற்றலும் பனைத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் பகுதிகளில் அதிகமாகி வருகிறது. மேலும் கருப்பட்டிக்கு போதியவிலை கிடைக்காமல் சிரமப்படுகின்றனர்.
கருப்பட்டி
இதுகுறித்து வெள்ளப்பட்டி கிராமத்தை சேர்ந்த பனைத் தொழிலாளர்கள் நந்தனம், நாகம்மாள் ஆகியோர் கூறியதாவது:-
சுமார் ஆறுமாத காலம் பதநீரை இறக்கி ஒரு பகுதியை அன்றாட குடும்பச் செலவுகளுக்காக கிராமம் கிராமமாக சென்று விற்போம். இந்த ஆண்டு மழை இல்லாததால் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே மரத்தில் இருந்து பதநீர் எடுக்கிறோம். பெரும்பாலான பதநீரை கருப்பட்டியாகக் காய்ச்சி வியாபாரிகளிடம் சென்று விற்கிறோம். 60 லிட்டர் பதநீரை காய்ச்சினால் தான் 15 கிலோ கருப்பட்டி கிடைக்கும். இந்த கருப்பட்டியை கொள்முதல் செய்யும் வியாபாரிகள் அனைவரும் சாயல்குடியில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒன்று கூடி விலை நிர்ணயம் செய்கின்றனர்.
தற்போது எங்களிடம் ஒரு கிலோ ரூ.250 என்ற விலையில் வாங்குகின்றனர். வெளியில் அதிக விலைக்கு கருப்பட்டி விற்பனை செய்யப்படுகிறது. பனைத்தொழில் இல்லாத 6 மாத காலங்களில் இந்த வியாபாரிகளிடம்தான் குடும்ப செலவுகளுக்காக வட்டிக்கு கடன் பெறுகிறோம். எனவே பிற இடங்களுக்கு சென்று எங்களால் உற்பத்தி செய்யப்படும் கருப்பட்டியை விற்க இயலாத நிலை ஏற்படுகிறது. இப்பகுதியில் சாயல்குடி, மாரியூர், நரிப்பையூர், கன்னிராஜபுரம் ஆகிய ஊர்களில் பனைவெல்ல உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் உள்ளது. இது பெயரளவிலேயே உள்ளது.
இதனால் பனைத் தொழிலாளர்களுக்கு எவ்வித பயனும் இல்லை. எனவே எங்களிடம் போதிய முதலீடு இல்லாததால் பனங்கற்கண்டு, சில்லுக்கருப்பட்டி, பனை விசிறி, பனங்கொட்டான், பெட்டி உள்ளிட்டவை உற்பத்தி செய்ய இயலாமல் வாழ்வாதாரம் முடங்கி கஷ்ட ஜீவனம் நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
அரசு நடவடிக்கை
உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பல வகைகளில் இதன் தேவை அதிகரித்துள்ளது. எனினும் பனைத்தொழிலாளர்கள் அவசர பணத்தேவைக்காகவும், சந்தை விலை அறியாததாலும், நேரமின்மையாலும் வெளிச்சந்தைக்கு கொண்டு செல்ல இயலாமல் இடைத்தரகர்களின் சுரண்டலுக்கு ஆளாகி வருகின்றனர்.
பதநீரை பனை வெல்லமாக காய்ச்சுவதை விட பனங்கற்கண்டாக தயாரித்து விற்றால் அதிக லாபம் கிடைக்கும். எனவே பனைத்தொழிலாளர்கள் நலன் கருதி தமிழ்நாட்டின் மாநில மரமாகிய பனை மரம் சார்ந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரம் சிறக்க கூட்டுறவுத்துறை, தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், பனைத் தொழிலாளர் மேம்பாட்டு சங்கங்கள் மூலம் பனங்கற்கண்டு உற்பத்தி செய்தல் மற்றும் பனைசார்ந்த பிற தொழில்களான பனை விசிறி, பெட்டி, கொட்டான், விளையாட்டுப் பொருட்கள் தயாரிப்பதற்கு தமிழக அரசு மானியத்துடன் கூடிய கடன் வழங்குவதுடன் உற்பத்தி செய்த பொருட்களை விற்பனை செய்வதற்கும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே பனைத்தொழிலாளர்களின் நீண்டகால எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Tags :
Next Story