சென்னை பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழல் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
சென்னை பல்கலைக்கழகத்தில் உலக சுற்றுச்சூழல் தினவிழா மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
சென்னை,
சென்னை பல்கலைக்கழகத்தில் உலக சுற்றுச்சூழல் தினவிழா மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவையொட்டி மரக்கன்றுகளை துணை வேந்தர் பி.துரைசாமி நட்டு வைத்தார். இதில் பல்கலைக்கழக பதிவாளர் கருணாநிதி மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டு உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய துணைவேந்தர் பி.துரைசாமி, ‘சென்னை பல்கலைக்கழக வளாகம் பிளாஸ்டிக் இல்லாத பல்கலைக்கழகமாக விளங்க வேண்டும். நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளில் தலா ஒரு மரம் நட வேண்டும்’ என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் நாட்டு நலப்பணித்திட்ட மண்டல இயக்குனர் சி.சாமுவேல் செல்லையா, சிண்டிகேட் உறுப்பினர் ஆர்.ஜெகநாதன், சுற்றுச்சூழல் அறிவியல் துறை தலைவர் (பொறுப்பு) என்.கோதண்டராமன், நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜி.பாஸ்கரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story