குற்றாலத்தில் சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு ஊர்வலம்


குற்றாலத்தில் சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு ஊர்வலம்
x
தினத்தந்தி 7 Jun 2017 2:00 AM IST (Updated: 7 Jun 2017 12:48 AM IST)
t-max-icont-min-icon

குற்றாலத்தில் சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

நெல்லை,

குற்றாலத்தில் சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

விழிப்புணர்வு ஊர்வலம்

குற்றாலத்தில் சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. தொடக்க நிகழ்ச்சிக்கு குற்றாலம் நகர பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி கணேசன் தலைமை தாங்கினார். மேலகரம் இந்தியன் லைட் ஹவுஸ் டிரஸ்ட் தலைவர் அப்துல் ரகுமான் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் சுரேஷ்குமார் வரவேற்றார். தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை விஜயலட்சுமி சுற்றுச்சூழல் குறித்து பேசினார். பின்னர் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நாடகம் நடந்தது.

சிறுவர் பூங்காவில் இருந்து தொடங்கிய ஊர்வலத்தில் இலஞ்சி ஆர்.பி மேல்நிலைப்பள்ளி, மேலகரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

ஊர்வலமானது, பூங்காவில் இருந்து புறப்பட்டு மெயின் அருவி வரை சென்று மீண்டும் புறப்பட்ட இடத்தை அடைந்தது. தென்காசி மாவட்ட கல்வி அலுவலர் சுடலை ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். குற்றாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜானகி மாணவ- மாணவிகளுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு துணிப்பைகள் வழங்கினார். அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. என்.எஸ்.எஸ் மாவட்ட தொடர்பு அலுவலர் ஜீவா நன்றி கூறினார்.

இதற்கான ஏற்பாடுகளை மேலகரம் இந்தியன் லைட் ஹவுஸ் டிரஸ்ட், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், இலஞ்சி ஆர்.பி. மேல்நிலைப்பள்ளி தேசிய பசுமைப்படை ஆகியன இணைந்து செய்து இருந்தன.

மரக்கன்றுகள்

நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் உலக சுற்றுச்சூழல் தின விழா கொண்டாடப்பட்டது. நெல்லை மாவட்ட முதன்மை நீதிபதி ராஜசேகர் தலைமை தாங்கி, சுயஉதவி குழுவினருக்கு மரக்கன்றுகளை வழங்கி பேசினார். மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான ராமலிங்கம் கலந்து கொண்டு பேசினார். விழா முடிவில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு ஒருங்கிணைப்பாளர் கோமதிநாயகம் நன்றி கூறினார். இதை தொடர்ந்து காடுகள் அழிவதாலும், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதாலும் ஏற்படும் தீமைகள் குறித்து பெண்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

சிவகிரி

சிவகிரி கோர்ட்டில் வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் உலக சுற்றுச்சூழல் தினவிழா நடந்தது. சிவகிரி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி நிலவேசுவரன் தலைமை தாங்கி, கோர்ட்டு வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டினார்.

பின்னர் நடந்த நிகழ்ச்சியில் சுற்றுப்புற சூழல் மேம்பாடு மற்றும் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். பொதுமக்களுக்கு சுற்றுப்புறச்சூழல் தொடர்பான விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் வனத்துறையினர், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

Next Story