பெங்களூருவில் சட்டவிரோதமாக மாற்ற முயற்சி: ரூ.8¼ கோடி செல்லாத ரூபாய் நோட்டுகள் பறிமுதல் 20 பேர் கைது
பெங்களூருவில் ரூ.8¼ கோடி செல்லாத ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
பெங்களூரு,
பெங்களூருவில் ரூ.8¼ கோடி செல்லாத ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையொட்டி சட்டவிரோதமாக இவற்றை மாற்ற முயன்றதாக 20 பேர் கைது செய்யப்பட்டனர்
கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையாக மத்திய அரசு உயர் மதிப்பு கொண்ட ரூ.500, ரூ.1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று கடந்த ஆண்டு அறிவித்தது.
சட்டவிரோதமாக
அதனை தொடர்ந்து பொதுமக்கள் வைத்திருந்த உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ள கால அவகாசமும் கொடுக்கப்பட்டு அந்த அவகாசமும் முடிந்தது. அதோடு ஒரு குறிப்பிட்ட அளவுக்கு செல்லாத ரூபாய் நோட்டுகளை வைத்து இருப்பதும் குற்றம் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் பெங்களூருவில் உயர் மதிப்பு கொண்ட செல்லாத ரூபாய் நோட்டுகளை சட்டவிரோதமாக கமிஷன் அடிப்படையில் மாற்றுவதற்கு மர்ம நபர்கள் முயற்சி செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் உயர் மதிப்பு கொண்ட செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்ற முயன்றதாக 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதுபற்றி பெங்களூரு மேற்கு மண்டல கூடுதல் போலீஸ் கமிஷனர் மாலினி கிருஷ்ணமூர்த்தி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-
பசவனகுடி
பெங்களூரு தெற்கு மண்டல போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் செல்லாத 500, 1,000 ரூபாய் நோட்டுகளை கமிஷன் அடிப்படையில் மாற்ற முயன்றதாக 5 வழக்குகள் பதிவாகின. இதில் 15 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
பசவனகுடி வாணிவிலாஸ் ரோட்டில் செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்ற முயன்றபோது இக்பால் முகமது(வயது 40), ராஜேஷ்(30), ரவீந்திரநாத்(44) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பசவனகுடி காந்தி பஜார் மெயின் ரோட்டில் உள்ள கூட்டுறவு வங்கி முன்பு சுரேஷ் (32), ரகுநந்தன்(32), பசவனகுடியில் இருக்கும் குடிநீர் வடிகால் வாரியத்துக்கு சொந்தமான குடிநீர் தொட்டியின் அருகே சதாசிவா(38), ஹர்சா(40) ஆகியோரும் செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்ற முயன்றபோது சிக்கினர்.
கைதான 7 பேரிடம் இருந்து ரூ.3.77 கோடி மதிப்புள்ள செல்லாத 500, 1,000 ரூபாய் நோட்டுகள், 2 கார்கள், 6 செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இந்த 3 சம்பவங்கள் குறித்து பசவனகுடி போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புட்டேனஹள்ளி
இதேபோல், செல்லாத 500, 1,000 ரூபாய் நோட்டுகளை கமிஷன் அடிப்படையில் மாற்ற முயன்றதாக புட்டேனஹள்ளி போலீசார் 2 வழக்குகளில் 8 பேரை கைது செய்தனர்.
விசாரணையில், அவர்கள் பெங்களூரு சஞ்சய் நகரை சேர்ந்த முரளி(39), வயாலிகாவலை சேர்ந்த பாலாஜி(36), சின்னப்பா கார்டனை சேர்ந்த சபிக் அகமது(39), சிக்பேட்டையை சேர்ந்த மஞ்சுநாத்(25), சிக்கஜாலாவை சேர்ந்த பரத்(21), உத்தரஹள்ளியை சேர்ந்த சீனிவாஸ்(50), சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிட்லகட்டா தாலுகா மேலூர் கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசமூர்த்தி(48), சந்திரேகவுடா(31) ஆகியோர் என்பது தெரியவந்தது. இவர்களிடம் இருந்து ரூ.2 கோடி மதிப்புள்ள செல்லாத 500, 1,000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மொத்தத்தில் கைதான 15 பேரிடம் இருந்து ரூ.5.77 கோடி செல்லாத 500, 1,000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.”
இவ்வாறு அவர் கூறினார்.
ரூ.8¼ கோடி பறிமுதல்
அதுபோல் பெங்களூரு செயின்ட் மார்க்ஸ் ரோட்டில் கமிஷன் அடிப்படையில் செல்லாத 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற முயன்ற 5 பேரை கப்பன் பார்க் போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் சென்னையை சேர்ந்த கிஷோர், சத்யா, ராஜா என்ற டைமண்ட் ராஜா, சரவண பிரியன் மற்றும் பெங்களூருவை சேர்ந்த ராஜகோபால் என்பது தெரியவந்தது.
இவர்களிடம் இருந்து ரூ.2½ கோடி மதிப்புள்ள செல்லாத 1,000 ரூபாய் நோட்டுகள், ஒரு கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இவர்கள் தனியார் ஓட்டல் ஒன்றில் வைத்து முரளி என்பவரிடம் செல்லாத ரூபாய் நோட்டுகளை கொடுத்து கமிஷன் அடிப்படையில் மாற்ற முயன்றபோது போலீசாரிடம் சிக்கினர். இதுகுறித்து, கப்பன் பார்க் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனையும் சேர்த்து பெங்களூருவில் மொத்தம் ரூ.8¼ கோடி செல்லாத ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இது தொடர்பாக மொத்தம் 20 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

Related Tags :
Next Story