பொம்மை துப்பாக்கியை காட்டி கொள்ளை சிறுவன் உள்பட 3 பேர் சிக்கினர்


பொம்மை துப்பாக்கியை காட்டி கொள்ளை சிறுவன் உள்பட 3 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 7 Jun 2017 1:57 AM IST (Updated: 7 Jun 2017 1:57 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில், பொம்மை துப்பாக்கியை காட்டி கொள்ளையடித்து வந்த சிறுவன் உள்பட 3 பேர் போலீசாரிடம் சிக்கினர்.

பெங்களூரு,

பெங்களூருவில், பொம்மை துப்பாக்கியை காட்டி கொள்ளையடித்து வந்த சிறுவன் உள்பட 3 பேர் போலீசாரிடம் சிக்கினர்.

பொம்மை துப்பாக்கியை காட்டி கொள்ளை

பெங்களூருவில் தனியாக செல்லும் பொதுமக்களை வழிமறித்து மிரட்டி கொள்ளையடித்து வந்த சிறுவன் உள்பட 3 பேரை ராஜகோபால் நகர் போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் ராஜகோபால் நகரை சேர்ந்த பிரசாந்த் (வயது 20), மகாதேவசாமி (22) மற்றும் 16 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.

இவர்கள், தனியாக செல்பவர்களை தடுத்து நிறுத்தி ஆயுதங்களை காட்டியும், உண்மை துப்பாக்கி போன்று இருக்கும் பொம்மை துப்பாக்கியை காட்டி மிரட்டியும் கொள்ளையடித்து வந்தது தெரியவந்தது.

16 வழக்குகளுக்கு தீர்வு

கைதான 3 பேரும் சேர்ந்து ராஜகோபால் நகர் உள்பட பல்வேறு போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து கொள்ளையடித்து வந்தது தெரியவந்துள்ளது. இவர்களிடம் இருந்து 115 கிராம் தங்க நகைகள், 28 செல்போன்கள், 10 மோட்டார் சைக்கிள்கள், ஒரு ஆட்டோ, ஒரு கத்தி, ‘ஏர்கன்‘ மற்றும் பொம்மை துப்பாக்கி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இவர்கள் 3 பேரும் போலீசாரிடம் சிக்கியதன் மூலம் ராஜகோபால் நகர், மகாலட்சுமி லே-அவுட், நந்தினி லே-அவுட், பீனியா, சுப்பிரமணியநகர் ஆகிய போலீஸ் நிலையங்களில் பதிவாகி இருந்த 16 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது. இதுகுறித்து ராஜகோபால் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story