கள்ளக்காதலனுடன் மனைவி ஓட்டம்: டீக்கடைக்காரர் தூக்குப்போட்டு தற்கொலை


கள்ளக்காதலனுடன் மனைவி ஓட்டம்: டீக்கடைக்காரர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 7 Jun 2017 3:15 AM IST (Updated: 7 Jun 2017 2:26 AM IST)
t-max-icont-min-icon

சென்னையை அடுத்த குரோம்பேட்டை, காமராஜபுரத்தை சேர்ந்த டீக்கடைக்காரர் தூக்குப்போட்டு தற்கொலை.

தாம்பரம்,

சென்னையை அடுத்த குரோம்பேட்டை, காமராஜபுரத்தை சேர்ந்தவர் ரஜினிகாந்த் (வயது 40). அப்பகுதியில் டீக்கடை நடத்தி வந்தார். இவரது மனைவி சத்தியா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். அவர்கள் குரோம்பேட்டையில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர். சத்தியா, மற்றொரு நபருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த ரஜினிகாந்த், தனது மனைவியை கண்டித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கல்வி கட்டணம் செலுத்துவதற்காக கணவன்–மனைவி இருவரும் தங்களது மகன்களுடன் காரில் குரோம்பேட்டையில் உள்ள பள்ளிக்கு சென்றனர். சத்தியா தனது கையில் ரூ.40 ஆயிரம் வைத்திருந்தார். சத்தியா திடீரென பள்ளியில் இருந்து வெளியே வந்தார். அவர் திரும்பி வராததால் ரஜினிகாந்த் வெளியே சென்று பார்த்தார். 

அப்போது சத்தியா, கள்ளக்காதலனுடன் மோட்டார் சைக்கிளில் செல்வதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மனைவி தனது கண்முன்னே கள்ளக்காதலனுடன் சென்றதால், மனமுடைந்த ரஜினிகாந்த் வீட்டுக்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து பல்லாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story