தொழிலாளர்களின் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை கலெக்டர் அறிவுரை
அதிக மதிப்பெண் பெற்ற தொழிலாளர்களின் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழிலாளர் நல அலுவலருக்கு கலெக்டர் அண்ணாதுரை அறிவுரை வழங்கினார்.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் தொழிலாளர் நலத்துறையின் சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக மாவட்ட கண்காணிப்புக்குழு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கி பேசியதாவது:-
தஞ்சை மாவட்டத்தில் தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர் நல சட்டத்தின்படி பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களை கண்டறிந்து புள்ளி விவரம் சேகரித்து பராமரிக்க வேண்டும். தொழிலாளர் நலவாரிய உறுப்பினர் படிவத்தில் உரிய தொழில் செய்யும் தொழிலாளர்கள் மட்டும் பதிவு செய்ய வேண்டும். காலத்திற்குள் தொழிலாளர்களை உறுப்பினராக பதிவு செய்து அவர்களுக்கு தொழிலாளர் அடையாள அட்டைகளை உடனே வழங்க வேண்டும். பதிவு பெற்ற தொழிலாளர்கள் மனுக்களில் உள்ள விவரங்களை சரிபார்க்க வேண்டும். தமிழ்நாடு கட்டுமான கழகம் மூலம் நடத்தப்படும் குறுகிய கால திறன் எய்தும் பயிற்சியில் உறுப்பினர்களை சேர்த்து பயன்பெற செய்ய வேண்டும்.
பதிவு செய்த தொழிலாளர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவித்தொகைகளை வழங்க வேண்டும். புலம் பெயர்ந்த கட்டுமான தொழிலாளர்களை கண்டறிந்து அவர்களை தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்ய வேண்டும். அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் வங்கி சேமிப்பு கணக்கு தொடங்க வேண்டும். தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் குழந்தைகள் 5-ம் வகுப்பு வரை படித்து அதிக மதிப்பெண் பெற்றிருந்தால் வட்டாரத்திற்கு ஒருவர் வீதம் 385 குழந்தைகளை தேர்வு செய்து அவர்களுக்கு அந்தந்த பகுதியில் உள்ள சிறந்த தனியார் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை கல்வி பெறும் வகையில் அரசாணை வழங்கப்பட்டுள்ளது.
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு
மேலும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை கண்டறிந்து மாவட்டத்திற்கு 10 மாணவர்கள் வீதம் தேர்வு செய்து அந்தந்த பகுதிகளில் உள்ள சிறந்த தனியார் பள்ளிகளில் 11-ம் வகுப்பு, 12-ம் வகுப்பில் கல்வி பயில அரசு அனுமதித்து ஆணை வழங்கியுள்ளது. இவர்களை கண்டறிந்து தனியார் பள்ளியில் சேர்க்க தொழிலாளர் நல அலுவலர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொழிற்சங்கம் வாயிலாக தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர் களின் குழந்தைகள் தகுதியுள்ளவராக இருப்பின் தொழிலாளர் நல அலுவலகம், சமூகபாதுகாப்பு திட்டம், கோர்ட்டு ரோடு, தஞ்சை என்ற முகவரியை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இந்த வாய்ப்பு குறித்து தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் தொழிலாளர் நல அலுவலர் அப்துல்அஜீஸ், தொழிலாளர் நலத்துறை ஆய்வாளர் பாஸ்கரன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story