பாவேந்தர் பாரதிதாசனாருக்கு மணிமண்டபம் நாராயணசாமி உறுதி


பாவேந்தர் பாரதிதாசனாருக்கு மணிமண்டபம் நாராயணசாமி உறுதி
x
தினத்தந்தி 7 Jun 2017 3:45 AM IST (Updated: 7 Jun 2017 2:33 AM IST)
t-max-icont-min-icon

பாவேந்தர் பாரதிதாசனாருக்கு மணிமண்டபம் அமைப்பது நமது கடமை என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி,

பாவேந்தர் பாரதிதாசனாருக்கு மணிமண்டபம் அமைப்பது நமது கடமை என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

புதுவை சட்டசபையில் கேள்வி நேரத்தில் ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ. எழுப்பிய கேள்வியை தொடர்ந்து நடந்த விவாதம் வருமாறு:–

மணிமண்டபம்

ஜெயமூர்த்தி: புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனாருக்கு புதுச்சேரியில் மணிமண்டபம் கட்டப்படுமா?

முதல்–அமைச்சர் நாராயணசாமி: இது அரசின் பரிசீலனையில் உள்ளது. மணிமண்டபம் அமைப்பது தொடர்பாக அவரது குடும்பத்தினரும் என்னிடம் பேசினார்கள். அவருக்கு பெருமை சேர்ப்பது நமது கடமை.

வையாபுரி மணிகண்டன்: தமிழகத்தில் மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா பாரதிதாசனாருக்காக கவிஞர் நாள் என்று ஒரு நாளை அறிவித்துள்ளார். பாரதிதாசன் நமது ஊரை சேர்ந்தவர்.

ஜெயமூர்த்தி: பாரதிதாசனார் இந்த அவையில் உறுப்பினராக இருந்துள்ளார்.

லட்சுமிநாராயணன்: பாரதிதாசன் அருங்காட்சியகம், சுப்பையா நினைவு இல்லத்தில் போதிய ஊழியர்கள் இல்லை. அவற்றை ஆராய்ச்சிக்காக மாணவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

பாராட்டு

இதுதொடர்பாக பாரதிதாசனாரின் பேரன் கோ.பாரதி விடுத்துள்ள அறிக்கையில், பாரதிதாசனாருக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று உறுதி அளித்த முதல்–அமைச்சர் நாராயணசாமிக்கும், கோரிக்கை விடுத்த ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ.வுக்கும் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.


Next Story