நிலுவையில் உள்ள சம்பளம் வழங்கக்கோரி ரே‌ஷன்கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


நிலுவையில் உள்ள சம்பளம் வழங்கக்கோரி ரே‌ஷன்கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 Jun 2017 3:45 AM IST (Updated: 7 Jun 2017 2:33 AM IST)
t-max-icont-min-icon

நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்கக்கோரி ரே‌ஷன்கடை ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.

புதுச்சேரி,

புதுவையில் 318 ரே‌ஷன் கடைகள் உள்ளது. இதில் 700 பேர் ஊழியர்களாக வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 13 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என தெரிகிறது. இது குறித்து பலமுறை அவர்கள் அதிகாரிகளை வலியுறுத்தியும் சம்பளம் வழங்கப்படவில்லை.

இதற்கிடையே பள்ளிக்கூடம் திறக்கும் தேதி நெருங்கியதால் ஊழியர்கள் தங்கள் பிள்ளைகளின் கல்வி கட்டணம் செலுத்த முடியாமலும், புத்தகம் வாங்கமுடியாமலும் சிரமம் அடைந்துள்ளனர். இதனையடுத்து நேற்று மதியம் ரே‌ஷன்கடை ஊழியர்கள் அனைவரும் இளங்கோ நகரில் உள்ள நியாய விலைகடை கூட்டுறவு சங்கத்தின் முன் ஒன்று திரண்டனர்.

ஆர்ப்பாட்டம்

அங்கு அவர்கள் தங்களுக்கு நிலுவையில் உள்ள 13 மாத சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் மத்திய கூட்டமைப்பு பொதுச்செயலாளர் லட்சுமணசாமி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் ஆதிநாராயணன், நடராஜன் மற்றும் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். அவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினர்.


Next Story