காங்கிரஸ் கட்சியின் ரூ.1000 கோடி சொத்துகளை முறைப்படுத்த நடவடிக்கை


காங்கிரஸ் கட்சியின் ரூ.1000 கோடி சொத்துகளை முறைப்படுத்த நடவடிக்கை
x
தினத்தந்தி 7 Jun 2017 4:30 AM IST (Updated: 7 Jun 2017 2:34 AM IST)
t-max-icont-min-icon

தமிழகம் முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியின் ரூ.1000 கோடி சொத்துகளை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மீட்பு குழு அமைப்பாளர் செல்வ பெருந்தகை கூறினார்.

திருச்சி,

திருநாவுக்கரசர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக பொறுப்பேற்ற பின்னர் ‘காங்கிரஸ் சொத்து மீட்பு குழு’ என குழுவை அமைத்தார். இந்த குழுவின் அமைப்பாளரான செல்வ பெருந்தகை தலைமையில் உறுப்பினர்கள் வேலுசாமி, விஷ்ணு பிரசாத், இதயதுல்லா, பழனிசாமி, ராமசுந்தரம் ஆகியோர் நேற்று திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான அருணாசல மன்றத்தில் ஆய்வு கூட்டத்தை நடத்தினார்கள். இந்த கூட்டத்தில் மாவட்ட தலைவர்கள் ஜெரோம் ஆரோக்கியராஜ் (மாநகர்), ஆர்.சி. பாபு (தெற்கு) ஜெயப்பிரகாஷ் (வடக்கு) மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக செல்வபெருந்தகை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ரூ.1000 கோடி சொத்து

காங்கிரஸ் கட்சிக்கு காமராஜர் காலத்தில் வாங்கப்பட்ட சொத்துகள், பல்வேறு தலைவர்களால் வழங்கப்பட்ட சொத்துகள் என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு சுமார் ரூ.1000 கோடி இருக்கும். இந்த சொத்துகளை பொறுத்தவரை பல இடங்களில் கோர்ட்டு வழக்கு, வருவாய் கோட்டாட்சியர் விசாரணை என பிரச்சினைகள் இருந்து வருகிறது. இந்த பிரச்சினைகள் பற்றி விசாரித்து சொத்துகளை முறைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மனு

திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலக வளாகத்தில் உள்ள கடைகளை வாடகைக்கு விட்டு இருப்பதில் முறைகேடு நடந்து இருக்கிறது. இதுபற்றி விசாரணை நடத்த வேண்டும் என கோரி அந்த குழுவிடம் வழக்கறிஞர் சரவணன் மனு கொடுத்தார். இதனால் ஆய்வு கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story