குடிநீர் வழங்காததை கண்டித்து காலிகுடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல்
ஆலங்குடி அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து காலிகுடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஆலங்குடி,
ஆலங்குடி அருகே குருந்தடிமனையில் கடந்த 6 மாதங் களாக குடிநீர் வினியோகம் சரியாக வழங்கப்பட வில்லை. இதனால் இப்பகுதி பொதுமக்கள் கடும் அவதி வருகின்றனர். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தினரிடம் பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த இப்பகுதி பொதுமக்கள் நேற்று ஆலங்குடி-மறமடக்கி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இது குறித்து தகவல் அறிந்து வந்த ஒன்றிய ஆணையர் ரவிச்சந்திரன், ஆலங்குடி இன்ஸ்பெக்டர் வைத்திய நாதன் மற்றும் அதிகாரிகள் சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் ஒரு வார காலத்திற்குள் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி கூறினர்.
இதையடுத்து பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் ஆலங்குடி- மறமடக்கி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Tags :
Next Story