உலகைச்சுற்றி
* ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆதிக்கம் மிகுந்த ராக்கா நகரில் அமெரிக்க ஆதரவு சிரிய படைகள் அதிரடி தாக்குதலை தொடங்கி இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
* அமெரிக்காவில் தேசிய பாதுகாப்பு முகமை என்.எஸ்.ஏ.யின் ரகசியங்களை செய்தி நிறுவனம் ஒன்றுக்கு கசியவிட்டதாக அரசு ஒப்பந்ததாரர் ரியலிட்டி லீ வின்னர் (வயது 25) என்பவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
* சிறுநீர்ப்பாதை தொற்று காரணமாக பிரபல அமெரிக்க நகைச்சுவை நடிகர் ஜெர்ரி லெவிஸ், லாஸ்வேகாஸ் நகர மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு வயது 91.
* 2016–ம் ஆண்டில் அமெரிக்காவில் செயல்பட்டு வருகிற 7 முன்னணி இந்திய அயலக பணி நிறுவனங்கள், குறைவான எண்ணிக்கையில்தான் எச்–1பி விசாக்களை பெற்றுள்ளதாக வாஷிங்டனை சேர்ந்த அமெரிக்க கொள்கைகளுக்கான தேசிய பவுண்டேசன் அறிக்கை கூறுகிறது.
* அமெரிக்காவில் தொலைபேசி ஆள் மாறாட்ட மோசடி, சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் 4 இந்தியர்களும், ஒரு பாகிஸ்தானியரும் சிக்கி உள்ளனர். இவர்கள் மீதான வழக்கு விசாரணை, டெக்சாஸ் தெற்கு மாவட்ட கோர்ட்டில் நடக்கிறது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது அவர்கள் அனைவரும் தங்கள் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டனர். விரைவில் இவர்களுக்கு விதிக்கப்பட உள்ள தண்டனை விவரம் தெரியவரும்.
* ஆஸ்திரேலியாவில் ஆல்பரி விமான நிலையத்தில் நின்று கொண்டிருந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக தகவல்கள் வெளியானதை தொடர்ந்து பயணிகள், விமானத்தில் இருந்து குதித்தனர். ஆனால் அந்த விமானத்தில் அதிகாரிகள் அங்குலம் அங்குலமாக தேடல் வேட்டை நடத்தியதில் வெடிகுண்டோ, வெடிபொருட்களோ இல்லை, அது வெறும் வதந்தி என்பது தெரியவந்தது.
Related Tags :
Next Story