நாகர்கோவிலில் திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட முதியவர்

நாகர்கோவில்,
பூதப்பாண்டி அருகே உள்ள இறச்சகுளம் அம்பலம்திருத்தி காலனி பகுதியை சேர்ந்தவர் பூமணி (வயது 80). இவருக்கு அரசால் வழங்கப்பட்ட இலவச வீட்டை உறவினர் ஒருவர் அபகரித்து கொண்டதோடு, பூமணியையும் அடித்து விரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் பூதப்பாண்டி போலீஸ் நிலையம், கலெக்டர் அலுவலகம் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் ஆகியவற்றில் புகார் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று காலை அவர் நாகர்கோவில் வடசேரி அண்ணா விளையாட்டரங்கம் அருகில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பு அமர்ந்து திடீரென உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். அவர் கையில் ஒரு அறிவிப்பு பலகையும் வைத்திருந்தார்.
அதில், தனக்கு 3 மகள்கள் என்றும், அவர்களுக்கு திருமணமாகிவிட்டதாகவும், அரசு வழங்கிய இலவச வீட்டை உறவினர் ஒருவர் மிரட்டி அபகரித்துவிட்டதாகவும், அந்த வீட்டை திரும்ப பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. பூமணியின் போராட்டத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் திருமாவேந்தன், நிர்வாகிகள் பகவதி, சிறுத்தை தாஸ், வக்கீல் ஜானி, கிஷோர் உள்ளிட்டோரும் ஆதரவு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்த வடசேரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அனுமதியின்றி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட பூமணியை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
பின்னர் அவரது கோரிக்கை தொடர்பாக பூதப்பாண்டி போலீசாரால் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறி போலீசார் அவரை சிறிது நேரத்தில் அனுப்பி வைத்தனர்.

Related Tags :
Next Story