தூத்துக்குடியில் குளம் தூர்வாரும் பணி கீதாஜீவன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்


தூத்துக்குடியில் குளம் தூர்வாரும் பணி கீதாஜீவன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 8 Jun 2017 2:30 AM IST (Updated: 8 Jun 2017 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் தி.மு.க. சார்பில் குளம் தூர்வாரும் பணியை கீதாஜீவன் எம்.எல்.ஏ. நேற்று தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் தி.மு.க. சார்பில் குளம் தூர்வாரும் பணியை கீதாஜீவன் எம்.எல்.ஏ. நேற்று தொடங்கி வைத்தார்.

குளம் தூர்வாரும் பணி

தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு தி.மு.க. எம்.எல்.ஏ.வும், கட்சி சார்பில் அவரவர் தொகுதியில் உள்ள குளங்களை தூர்வார வேண்டும் என்று அறிவுறுத்தினார். அதன்படி தூத்துக்குடி தொகுதிக்கு உட்பட்ட தூத்துக்குடி மாடன்குளம் தூர்வாரும் பணி நேற்று தொடங்கியது. கீதாஜீவன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும் போது, தூத்துக்குடி தொகுதியில் உள்ள மாடன்குளம் தூர்வாரும் பணி தொடங்கி உள்ளது. இந்த குளம் 2½ ஏக்கர் பரப்பு கொண்டது. இதில் நீரை தேக்கி வைப்பதால் நிலத்தடி நீர்மட்டம் உயரும். மழைக்காலங்களில் ஊருக்குள் வெள்ளம் வருவது தடுக்கப்படும். மேலும் முள்ளக்காட்டில் உள்ள ஒரு குளத்தை தூர்வாருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சி.வ.குளத்தை தூர்வார பலமுறை கோரிக்கை விடுத்தோம். அதன்பேரில் குளத்தை தூர்வார அரசு நிதி ஒதுக்கி உள்ளது. அந்த பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று கூறினார்.

யார்–யார்?

நிகழ்ச்சியில் தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ஜெகன், மாவட்ட துணை செயலாளர் ராஜ்மோகன்செல்வின், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கஸ்தூரிதங்கம், ஜெயக்குமார் ரூபன், முன்னாள் கவுன்சிலர்கள் ராமகிருஷ்ணன், கீதாமுருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story