சாராயம் விற்ற பெண் உள்பட 3 பேர் கைது


சாராயம் விற்ற பெண் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 8 Jun 2017 3:45 AM IST (Updated: 8 Jun 2017 12:35 AM IST)
t-max-icont-min-icon

பேரளம், நன்னிலம் பகுதியில் சாராயம் விற்ற பெண் உள்பட 3 பேர் கைது

நன்னிலம்,

பேரளம் பகுதியில் நேற்று சாராயம் விற்பனை நடைபெறுவதாக பேரளம் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அங்கு கோவில் திருமாளத்தை சேர்ந்த முத்தழகு மனைவி கலைச்செல்வி(வயது50) என்பவர் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கலைச்செல்வியை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 10 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர். இதேபோல் நன்னிலத்தில் சாராயம் விற்பனை செய்வதாக நன்னிலம் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர். அங்கு நன்னிலத்தை அடுத்துள்ள பண்ணைவிளாகத்தில் நாகக்குடி காலனி தெருவை சேர்ந்த நெடுமாறன்(45) என்பவர் சாராயம் விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நெடுமாறனை கைது செய்து, அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். மேலும் பேரளம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கழனிவாசலை சேர்ந்த கல்யாணகுமார் மதுபாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்த 6 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.


Related Tags :
Next Story