செங்குன்றம் அருகே சாலை நடுவில் உள்ள தடுப்பு சுவரில் லாரி மோதியது


செங்குன்றம் அருகே சாலை நடுவில் உள்ள தடுப்பு சுவரில் லாரி மோதியது
x
தினத்தந்தி 8 Jun 2017 3:15 AM IST (Updated: 8 Jun 2017 1:49 AM IST)
t-max-icont-min-icon

செங்குன்றம்–திருவள்ளூர் கூட்டு சாலை அருகே ஆலமரம் பகுதியில் வந்தபோது லாரி, சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவரில் பயங்கரமாக மோதியது.

செங்குன்றம்,

திருவள்ளூரில் இருந்து செங்குன்றம் நோக்கி நேற்று அதிகாலை மண் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. செங்குன்றம்–திருவள்ளூர் கூட்டு சாலை அருகே ஆலமரம் பகுதியில் வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவரில் பயங்கரமாக மோதியது.

மோதிய வேகத்தில் லாரியின் முன்பகுதி மற்றும் சக்கரங்கள் சேதம் அடைந்தன. காலை நேரம் என்பதால் அப்போது சாலையில் வேறு வாகனங்கள் வராததால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. 

Next Story