கர்நாடக சட்டசபையில் சரக்கு-சேவை வரி மசோதா தாக்கல் விரிவாக விவாதிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்
கர்நாடக சட்டசபையில் சரக்கு-சேவை வரி மசோதாவை முதல்-மந்திரி சித்தராமையா நேற்று தாக்கல் செய்தார்.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபையில் சரக்கு-சேவை வரி மசோதாவை முதல்-மந்திரி சித்தராமையா நேற்று தாக்கல் செய்தார். அப்போது இந்த மசோதா குறித்து விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் வலியுறுத்தினர்.
கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.
சரக்கு, சேவை வரி மசோதா
சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், மத்திய அரசு இயற்றியுள்ள சரக்கு, சேவை வரி சட்டத்தை ஏற்கும் விதமாக கர்நாடக சரக்கு, சேவை வரி-2017 மசோதாவை சித்தராமையா நேற்று தாக்கல் செய்தார். அப்போது ஜனதா தளம்(எஸ்) கட்சி துணைத்தலைவர் ஒய்.எஸ்.வி.தத்தா எழுந்து பேசுகையில், “கர்நாடக சரக்கு, சேவை வரி மசோதா குறித்து விரிவாக விவாதிக்க அனுமதிக்க வேண்டும். எந்த விவாதமும் நடத்தாமல் இதை நிறைவேற்றுவது சரியல்ல“ என்றார்.
இதற்கு பதிலளித்த சித்தராமையா, “இதுபற்றி இங்கு விவாதம் நடத்துவதால் எதுவும் நடக்கப்போவது இல்லை. மத்திய அரசு சரக்கு, சேவை வரி சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. அதேபோல் இந்த சட்ட மசோதாவை நான் இந்த சபையில் தாக்கல் செய்துள்ளேன். அதனால் இதுபற்றி விவாதம் தேவை இல்லை“ என்றார்.
மாநிலங்கள் பிச்சை எடுக்கும் நிலை
இதை ஏற்க மறுத்த தத்தா, “மத்திய அரசின் சரக்கு, சேவை வரி சட்டம் இயற்றப்படும் முன்பே இந்த மசோதாவை இங்கு தாக்கல் செய்திருக்க வேண்டும். எல்லாம் முடிந்த பிறகு இப்போது மசோதாவை தாக்கல் செய்வது சரியல்ல. இந்த சரக்கு, சேவை வரி சட்டத்தால் மத்திய அரசிடம் மாநிலங்கள் பிச்சை எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது“ என்றார்.
இதற்கு ஆதரவாக பேசிய பா.ஜனதா உறுப்பினர் பசவராஜ் பொம்மை, “சரக்கு, சேவை வரி சட்டம் குறித்து பொதுமக்களுக்கு தெரியப் படுத்த வேண்டும். இந்த சட்டம் பற்றி இங்கு விவாதம் நடைபெற வேண்டும். விவாதம் நடைபெற்றால் இந்த சட்டத்தை அமல்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் குறித்து இங்கு பேச முடியும். மேலும் சரக்கு, சேவை வரி கவுன்சிலுக்கு சிக்கல்கள் குறித்து தெரிவிக்க முடியும். அதனால் விவாதம் நடைபெறுவதால் எந்த பயனும் இல்லை என்று சொல்வது சரியல்ல“ என்றார்.
எந்த ஆட்சேபனையும் இல்லை
மீண்டும் எழுந்து பேசிய சித்தராமையா, “விவாதம் நடத்த எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. விவாதம் நடைபெற்றால் நாங்கள் என்ன பதில் கூறுவது. எல்லாவற்றையும் மத்திய அரசே தீர்மானிக்கிறது. இந்த சட்டத்திற்கு அனைத்து மாநிலங்களும் ஒப்புதல் வழங்கியுள்ளது. அரசியல் சாசனப்படி இந்த மசோதாவை இங்கு தாக்கல் செய்துள்ளேன்“ என்றார்.
அப்போது மீண்டும் குறுக்கிட்டு பேசிய தத்தா, “விவாதம் நடைபெற்று ஆக வேண்டும் என்று பிடிவாதமாக கூறினார். இதற்கு பதிலளித்த சித்தராமையா, “சரக்கு, சேவை வரி சட்டம் பற்றி பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. அப்போது உங்கள் கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள் தேவேகவுடா, புட்டராஜூ ஆகியோர் இருந்தனர். பா.ஜனதாவை சேர்ந்த 17 எம்.பி.க்கள் இருந்தனர். அவர்கள் ஏன் பேசவில்லை. இப்போது இங்கு விவாதம் நடத்துவதால் எந்த பயனும் இல்லை. வேண்டுமானால், சபாநாயகர், எம்.எல்.ஏ.க்களுக்கு இதுபற்றி தெரிவிக்க ஒரு கூட்டத்தை நடத்தலாம்” என்றார்.
தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்
இதை ஏற்றுக்கொண்ட சபாநாயகர், “விதான சவுதாவில் சரக்கு, சேவை வரி சட்டம் குறித்த கருத்தரங்கு நடத்தப்படும். இதில் எம்.எல்.ஏ.க்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும். அதை பற்றி அறிந்துகொள்ளலாம்” என்றார். இந்த கர்நாடக சரக்கு, சேவை வரி மசோதாவில் பெட்ரோல், டீசல், அதிக வேகம் கொண்ட எரிபொருள், கச்சா எண்ணெய் இயற்கை எரிவாயு ஆகியவற்றின் மீது வரி விதிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story