அரூரில் பலத்த சூறைக்காற்று மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன


அரூரில் பலத்த சூறைக்காற்று மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன
x
தினத்தந்தி 7 Jun 2017 10:30 PM GMT (Updated: 2017-06-08T02:42:23+05:30)

அரூரில் பலத்த சூறைக்காற்று மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன

அரூர்,

அரூரில் நேற்று மாலை திடீரென பலத்த சூறைக்காற்று வீசியது. இதனால் சாலைகளில் நடந்து சென்றவர்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் அருகே இருந்த குடியிருப்பு பகுதிகள் மற்றும் கடைகளில் ஒதுங்கி நின்றனர்.

சூறைக்காற்றின்போது அரூர் பை-பாஸ் சாலையில் 2 மரங்கள் மற்றும் 2 மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. அப்போது அந்த பகுதியில் சாலையில் மக்கள் நடமாட்டம் இல்லாததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சாலையில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் விழுந்ததால் அந்த பகுதியில் ½ மணி நேரம் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து அதிகாரிகள் அங்கு வந்ததும் சீரமைப்பு பணி நடைபெற்றது. 

Related Tags :
Next Story