மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் அனைத்து கட்சி சார்பில் நடந்தது


மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் அனைத்து கட்சி சார்பில் நடந்தது
x
தினத்தந்தி 8 Jun 2017 4:15 AM IST (Updated: 8 Jun 2017 2:46 AM IST)
t-max-icont-min-icon

நாகையில் மாட்டிறைச்சிக்கு தடைவிதித்த மத்திய அரசை கண்டித்து அனைத்து கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாகப்பட்டினம்,

மாட்டிறைச்சிக்கு தடைவிதித்த மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, திராவிட கழகம் உள்ளிட்ட அனைத்து கட்சி சார்பில் நாகை புதிய பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் ஏ.வி.முருகையன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாட்டிறைச்சிக்கு தடைவிதித்த மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் காங்கிரஸ் கட்சியின் நாகை மாவட்ட பொதுச்செயலாளர் ராமலிங்கம், சிறுபான்மைபிரிவு ஒருங்கிணைப்பாளர் நவ்சாத், காரிய கமிட்டி தலைவர் சுப்பிரமணியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் சண்முகம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மாரிமுத்து, நாகை.மாலி, விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த பேரறிவாளன், நாகை சட்டமன்ற தொகுதி செயலாளர் அறிவழகன், திரவிட கழக நாகை மாவட்ட செயலாளர் நெப்போலியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story