பூந்தமல்லி, கோயம்பேடு பகுதியில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 7 பேர் கைது


பூந்தமல்லி, கோயம்பேடு பகுதியில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 7 பேர் கைது
x
தினத்தந்தி 8 Jun 2017 3:18 AM IST (Updated: 8 Jun 2017 3:18 AM IST)
t-max-icont-min-icon

பூந்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து திருமழிசையை சேர்ந்த விக்னேஷ்ராஜ் (20), தினேஷ்குமார் (19) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

ஆவடி, 

சென்னையை அடுத்த பரங்கிமலையை சேர்ந்தவர் நவீன் டெரிட் சாமுவேல் (வயது 33). இவர், வேலை விஷயமாக பெங்களூரு சென்று விட்டு பஸ்சில் நள்ளிரவில் பூந்தமல்லி பஸ் நிலையத்தில் வந்து இறங்கினார். அங்கிருந்து வீட்டுக்கு செல்ல பஸ்சுக்கு காத்திருந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர், அவரை தாக்கி 2 செல்போன் ரூ.1,500 பணத்தை பறித்துச்சென்று விட்டனர்.

இது குறித்த புகாரின் பேரில் பூந்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து திருமழிசையை சேர்ந்த விக்னேஷ்ராஜ் (20), தினேஷ்குமார் (19) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள செல்போன், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தலைமறைவான அவர்களது கூட்டாளியை போலீசார் தேடி வருகின்றனர்.

இதேபோல் கோயம்பேடு பஸ் நிலையத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அங்கு சந்தேகப்படும்படியாக நின்ற 5 பேரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள், ஆந்திர மாநிலத்தை சேர்ந்த வெங்கடேஷ் (26), சுப்பன் (32), சாயன்ரமேஷ் (25), செந்து (25), அகில் (25) என்பது தெரிந்தது.

இவர்கள், கோயம்பேடு பஸ் நிலையத்தில் பயணிகளின் கவனத்தை திசை திருப்பி செல்போன்களை பறித்து வந்ததும் தெரிந்தது. 5 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 7 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

Next Story