ராய்காட் அருகே சோகம் 2 குடும்பத்தை சேர்ந்த 5 பேர் ஆற்றில் மூழ்கி பலி
ராய்காட் அருகே 2 குடும்பத்தை சேர்ந்த 5 பேர் ஆற்றில் மூழ்கி பலியானார்கள்.
புனே,

ஆற்றில் இறங்கி விளையாட்டு
ராய்காட் மாவட்டம் காலாப்பூர் தாலுகாவில் உள்ள பென் ரோடு வாவோசி சிர்வளிகாவ் கிராமத்தை சேர்ந்த பெண் கவுரி ஆர்தே(வயது33). இவரது மகள் தேஜஸ்வினி(10), மகன் துஷார்(7). நேற்று காலை பிள்ளைகள் இருவரையும் அழைத்து கொண்டு கவுரி ஆர்தே அங்குள்ள ஆற்றில் குளிக்க சென்றார்.
அந்த சமயத்தில் அதே பகுதியை சேர்ந்த மீனாட்சி வாக்னீஸ்(31) என்ற பெண்ணும் தனது மகன் சுபம்(8) என்ற சிறுவனுடன் அங்கு வந்திருந்தார்.
பின்னர் பெண்கள் இருவரும் ஆற்றங்கரையில் அமர்ந்து துணி துவைத்து கொண்டிருந்தனர். அப்போது சிறுமி, சிறுவர்கள் மூன்று பேரும் ஆற்றில் இறங்கி ஆனந்தமாக குளித்துக்கொண்டே தண்ணீரில் விளையாடி கொண்டிருந்தனர்.
தாய், பிள்ளைகள் மூழ்கினர்
விளையாட்டு உற்சாகத்தில் 3 பேரும் ஆற்றில் ஆழமான இடத்திற்கு சென்றிருக்கிறார்கள். இதில் தண்ணீரில் நிலை கொள்ள முடியாமல் 3 பேரும் தத்தளித்தனர். சிறிது நேரத்தில் ஒருவர் பின் ஒருவராக தண்ணீரில் மூழ்கினர்.
இதைப்பார்த்து கவுரி ஆர்தே, மீனாட்சி வாக்னீஸ் இருவரும் அலறினார்கள். உதவிக்கேட்டு கூச்சல் போட்டனர். மேலும் பிள்ளைகளை காப்பாற்றுவதற்காக அவர்கள் இருவரும் ஆற்றில் குதித்தனர்.
ஆனால் துரதிருஷ்டவசமாக அவர்களும் ஆற்றில் மூழ்கினார்கள். இதுபற்றி அறிந்த சிர்வளிகாவ் கிராமத்தை சேர்ந்தவர்கள் போலீஸ் மற்றும் தீயணைப்பு படையினருக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர்.
பிணமாக மீட்பு
தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தினார்கள்.
சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு 5 பேரும் பிணமாக மீட்கப்பட்டனர். போலீசார் அவர்களது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காலாப்பூர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரண்டு குடும்பத்தை சேர்ந்த 5 பேர் ஆற்றில் மூழ்கி பலியான இந்த சம்பவம் வாவோசி சிர்வளிகாவ் கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

Related Tags :
Next Story