முதல்–மந்திரியின் முதன்மை செயலாளர் உள்பட 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ‘திடீர்’ பணி இடமாற்றம்
முதல்–மந்திரியின் முதன்மை செயலாளர் உள்பட 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் திடீரென பணி இடமாற்றம் செய்யப்பட்டனர்.
மும்பை,
முதல்–மந்திரியின் முதன்மை செயலாளர் உள்பட 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் திடீரென பணி இடமாற்றம் செய்யப்பட்டனர்.
முதன்மை செயலாளர்மராட்டிய முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிசின் முதன்மை செயலாளராக இருந்தவர் மிலிந்த் மைஸ்கர். நேற்று திடீரென மிலிந்த் மைஸ்கர் உள்பட 5 பேரை மாநில அரசு அதிரடியாக பணி இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்தது.
இதன்படி முதல்–மந்திரியின் முதன்மை செயலாளராக இருந்த மிலிந்த் மைஸ்கர் மாநில வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின்(மகாடா) தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
மாவட்ட பஞ்சாயத்து நிர்வாக அதிகாரிஅகமதுநகர் மாநகராட்சி கமிஷனராக இருந்த டி.பி.கவாடே நாசிக்கில் பழங்குடியினர் நல கூடுதல் கமிஷனராகவும், நந்துர்பர் மாவட்ட பஞ்சாயத்து தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ஜி.சி.மங்கலே அகமதுநகர் மாநகராட்சி கமிஷனராகவும் நியமிக்கப்பட்டனர்.
நந்துர்பர் மாவட்ட பஞ்சாயத்து தலைமை நிர்வாக அதிகாரியாக அகமதுநகர் மாவட்ட பஞ்சாயத்து தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் ரவிசந்திர பின்வாடேவும், காலியாகும் அவரது இடத்திற்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி வி.பி.மானேவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த தகவல் மராட்டிய தலைமை செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.