பச்சைத்தேயிலைக்கு கொள்முதல் விலை வழங்காமல் முன்தொகை வழங்கும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை


பச்சைத்தேயிலைக்கு கொள்முதல் விலை வழங்காமல் முன்தொகை வழங்கும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை
x
தினத்தந்தி 9 Jun 2017 3:15 AM IST (Updated: 8 Jun 2017 11:10 PM IST)
t-max-icont-min-icon

பச்சைத்தேயிலைக்கு வாரியம் நிர்ணயம் செய்த குறைந்த பட்ச கொள்முதல் விலை வழங்காமல் முன்தொகை வழங்கி வரும் தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேயிலை வாரிய அதிகாரி கூறினார்.

கோத்தகிரி,

இந்திய தேயிலை வாரியம் மாதந்தோறும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிறு தேயிலை விவசாயிகளிடம் இருந்து, தேயிலை தொழிற்சாலைகள் கொள்முதல் செய்யும் பசுந்தேயிலைக்கு குறைந்த பட்ச கொள்முதல் விலையை நிர்ணயித்து வருகிறது. கடந்த மே மாதத்திற்கான கொள்முதல் விலையாக கிலோ ஒன்றுக்கு 15 ரூபாயும், ஜூன் மாதத்திற்கான கொள்முதல் விலையாக 14 ரூபாயும் தேயிலை வாரியம் நிர்ணயித்து உள்ளது. எனினும் பெரும்பாலான தேயிலை தொழிற்சாலைகள் 10 ரூபாய் முதல் 12 ரூபாய் முன் தொகையாக மட்டுமே சிறு விவசாயிகளுக்கு வழங்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது குறித்து தேயிலை வாரிய செயல் இயக்குனர் பால்ராஜ் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

முன்தொகை

சிறு தேயிலை விவசாயிகளிடம் இருந்து பச்சைதேயிலை கொள்முதல் செய்யும் அனைத்து தொழிற்சாலைகளும் முன் (அட்வான்ஸ்) தொகை வழங்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும். தேயிலை கொள்முதல் செய்யும் போது விவசாயிகளுக்கு தினந்தோறும் அல்லது வாரந்தோறும் கொள்முதல் செய்த தேயிலைக்கான தொகையை உடனடியாக வழங்க வேண்டும். தேயிலை தொழிற்சாலைகள் முறையான ரசீது அச்சிட்டு பச்சைதேயிலை கொள்முதல் செய்யும் விவசாயிகள் பெயரில் மட்டுமே ரசீது வழங்க வேண்டும்.

இந்த ரசீது புத்தகங்களை தேயிலை வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்யும் போது காண்பிக்க வேண்டும். மேலும் இந்த மாதிரி செய்யாத தேயிலை தொழிற்சாலைகள் மீது புகார்கள் பெறப்பட்டால் தேயிலை சட்டப்பிரிவு 1953-ன் கீழ் சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறி னார்.

Next Story