கும்மிடிப்பூண்டி அருகே விஷம் குடித்து 2 பேர் தற்கொலை
கும்மிடிப்பூண்டி அருகே வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை குடித்து 2 பேர் தற்கொலை.
கும்மிடிப்பூண்டி,
கும்மிடிப்பூண்டியை அடுத்த தேர்வழி கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (வயது 21). தனியார் தொழிற்சாலை ஊழியர். கடந்த 2–ந் தேதி வீட்டில் தனியாக இருந்த தமிழ்ச்செல்வன், வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை குடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தமிழ்ச்செல்வன் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
கும்மிடிப்பூண்டியை அடுத்த மங்காவரத்தை சேர்ந்தவர் மோகன் (55). கூலித்தொழிலாளி. கடந்த 5–ந் தேதி வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை குடித்த மோகன் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மோகன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த தற்கொலை சம்பவங்கள் தொடர்பாக இன்ஸ்பெக்டர் சுடலைமணி தலைமையில் கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story