சீதாராம்யெச்சூரி மீது தாக்குதல் முயற்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்


சீதாராம்யெச்சூரி மீது தாக்குதல் முயற்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 Jun 2017 10:45 PM GMT (Updated: 2017-06-09T00:18:26+05:30)

சீதாராம் யெச்சூரி மீது தாக்குதல் முயற்சியை கண்டித்து திருவாரூர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மன்னார்குடி,

டெல்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி மீது நடைபெற்ற தாக்குதல் முயற்சியை கண்டித்து மன்னார்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பெரியார் சிலை சந்திப்பு அருகில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்ாட்டத்திற்கு நகர செயலாளர் சந்திரா தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் திருஞானம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன், மாவட்ட குழு உறுப்பினர் தங்கராசு, சி.ஐ.டி.யூ. நகர குழு உறுப்பினர் ரகுபதி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பா.ஜனதா கட்சி மற்றும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினரை கண்டித்து கோஷமிட்டனர்.

இதேபோல திருத்துறைப்பூண்டி புதிய பஸ் நிலையம் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் கோபு தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. பழனிச்சாமி, தேசிய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் வையாபுரி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தெற்கு மாவட்ட செயலாளர் செல்வன், தி.க. நகர செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நீடாமங்கலம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம்யெச்சூரியை தாக்க முயற்சித்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரை கண்டித்து நீடாமங்கலத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் கைலாசம் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலியபெருமாள், கந்தசாமி, ராஜமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் நாகூரான், முனியாண்டி, ஜோசப், அண்ணாதுரை, ஜான்கென்னடி, பூசாந்திரம் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் சீதாராம்யெச்சூரியை தாக்க முயற்சித்தவர்களை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதேபோல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் திருவாரூர் பஸ் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் நாகராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரெங்கசாமி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் சாமியப்பன், மாதவன், முருகைய்யன், ஒன்றிய செயலாளர் இடும்பையன், ஒன்றியக்குழு உறுப்பினர் வடுகநாதன், நகர செயலாளர் ராமசாமி, நகரக்குழு உறுப்பினர் கிருஷ்ணன், மாணவர் சங்க மாவட்ட செயலாளர் பிரகாஷ், மாதர் சங்க மாவட்ட துணை செயலாளர் கோமதி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினரை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.


Next Story