புரட்சி பாரதம் கட்சி நிர்வாகி கொலை: உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்


புரட்சி பாரதம் கட்சி நிர்வாகி கொலை: உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 Jun 2017 10:00 PM GMT (Updated: 2017-06-09T00:20:10+05:30)

திருவள்ளூரை அடுத்த அதிகத்தூரை சேர்ந்த புரட்சிபாரதம் கட்சி நிர்வாகி கொலை. உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்.

திருவள்ளூர், 

திருவள்ளூரை அடுத்த அதிகத்தூரை சேர்ந்த புரட்சிபாரதம் கட்சி நிர்வாகியும், வக்கீலுமான வேலாயுதம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது குறித்து கடம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த கொலையில் சம்மந்தப்பட்டதாக சிலரை கைது செய்தனர். இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை என்றும், உண்மையான குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் நேற்று திருவள்ளூரில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகே புரட்சிபாரதம் கட்சியை சேர்ந்தவர்கள், வக்கீல்கள், அதிகத்தூர் கிராம மக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு புரட்சிபாரதம் கட்சியின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் சி.பி.குமார் தலைமை தாங்கினார். மாநில இளைஞர் அணி தலைவர் மகா என்ற மகாலிங்கம், மாநில தொழிலாளர் அணி தலைவர் தங்கசாமி, ஒன்றிய தலைவர் டார்ஜன், ஒன்றிய செயலாளர் சரவணன், வக்கீல்கள் சங்க நிர்வாகிகள் ஸ்ரீமுருகா, செந்தில்குமார், சந்திரசேகர், ஆனந்தகுமார், அலெக்ஸ் முன்னிலை வகித்தார்கள். அப்போது இந்த கொலையில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று கூறி அவர்கள் கண்டன கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.

Next Story